Nani: தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?

Nani About The Best Dancer In Tamil Cinema : தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்து வருபவர் நானி. இவரின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹிட் 3. இந்த படம் வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த நடிகர் நானி, தமிழ் சினிமாவில் சிறந்த டான்சர் பற்றி பேசியுள்ளார்.

Nani: தமிழ் சினிமாவின் சிறந்த டான்ஸர்.. நானி சொன்னது யாரை தெரியுமா?

நடிகர் நானி

Published: 

27 Apr 2025 20:00 PM

நடிகர் நானியின்  (Nani) முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹிட் 3 (HIT 3). இந்த படத்தை டோலிவுட் இயக்குநர் சைலேஷ் கொளனு (Sailesh Kolanu)  இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது முற்றிலும் வன்முறை கலந்த, க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமானது மார்வெல் திரைப்படங்களின் தொகுப்பைப் போல, ஹிட் வழக்கு என்ற தொகுப்பின் (Collection of HIT cases) கீழ் அடுத்தடுத்த பாகங்களாக வெளியாகிவருகிறது. தற்போது இதன் தொடர்ச்சியான பாகங்களாக உருவாகியுள்ள படம் ஹிட் 3. இந்த படத்தில் நானி கதாநாயகனாக நடிக்க, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty)  நாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது 2025, மே 1ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில் , ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தமிழில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த நானி, நடிகர் விஜய்யின் நடனத்தைப் பற்றிப் பேசியுள்ளார். தற்போது அவர் பேசிய விஷயம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நானியும் பல நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார்.

நடிகர் தளபதி விஜய்யைப் பற்றி நானி பேசியது :

அந்த நேர்காணலில் நடிகர் நானி “தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சார் மிகவும் சிறந்த டான்சர் என்று கூறலாம். சிறப்பாக நடனமாடுபவர் மற்றும் வலி போன்றவற்றால் அவர்கள் சிறந்த நடனக் கலைஞர் ஆகிவிட முடியாது. சிறந்த நடனக் கலைஞர் தான் ரசிகர்களை மகிழ்விப்பதை உணரவேண்டும். அந்த விதத்தில் விஜய் சார் மிகவும் அருமையானவர். அவர் அந்த விஷயத்தில் அவர் ஒரு தனிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று நடிகர் நானி கூறியிருந்தார்.

நடிகர் நானி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

நடிகர் நானியின் இந்த ஹிட் 3 படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படமானது ஒரு க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. ஒரு வழக்கு அடிப்படையில் இந்த படத்தின் கதையானது நகர்வதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஹிட் 3 படத்தில் கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றும் வட்டாரங்கள் கூறிய வருகின்றனர். மேலும் ஹிட் 4 படத்தில் கார்த்தி லீட் ரோலில் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹிட் 3 படமானது சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் ஒரே தேதியில் வெளியாகிறது. தமிழில் சூர்யாவின் ரெட்ரோ படமானது எந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்று வருகிறதோ, அதை போல நானியின் ஹிட் 3 தெலுங்கில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இரு படங்களும் வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. நிச்சயமாக இந்த படங்களுக்கு இடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.