தென்னிந்திய சினிமா பாலிவுட்டை காப்பாற்றுகிறது… நடிகர் நானி
Actor Nani: பாசிட்டிவான விமர்சனங்கள் இருந்தபோதிலும் பாலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் போராடி வந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் தென்னிந்திய மொழி படங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஏற்ற தாழ்வுகள் இருந்தபோதிலும் இந்தி சினிமா மீண்டு எழும் என்று நான் நம்புகிறேன் என நடிகர் நானி தெரிவித்துள்ளார்.

நடிகர் நானி
தெலுங்கு சினிமாவில் நேச்சுரல் ஸ்டாராக வலம் வரும் நடிகர் நானிக்கு (Nani) தென்னிந்திய முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். குறிப்பாக தமிழ் ரசிகர்கள் நானியை தெலுங்கு நடிகர் என்று பார்ப்பதில்லை. கோலிவுட்டில் உள்ள முன்ன்ணி நடிகரைப் போலவே நானியையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வெப்பம் (Veppam) படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆன நடிகர் நானி முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இவர் நான் ஈ படத்தில் நடிகை சமந்தாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் வேற லெவல் ஹிட் கொடுத்தது. நடிகர் நானிக்கும் தமிழ் ரசிகைகளின் நெஞ்சங்களிலும் நீங்காத இடம் கிடைத்தது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படங்களும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
நானியின் ஹிட் 3 படம்:
இந்த நிலையில் நடிகர் நானி தற்போது ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது, இந்தப் படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு எழுதி இயக்கியுள்ளார். இதில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் நானி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் நடிகர் நானி பேசியதாவது,
பாலிவுட் சினிமாவின் நிலை:
பாலிவுட் சமீப காலமாக பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. பாசிட்டிவான விமர்சனங்கள் இருந்தபோதிலும் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டன. இருப்பினும் 2024 ஆம் ஆண்டு வியத்தகு மாற்றத்தைக் கண்டது. ஏனெனில் அதிக வசூல் செய்த பத்து இந்திய படங்களில் ஆறு தென்னிந்தியப் படங்களிலிருந்து வந்தவை. அவற்றில் புஷ்பா 2 மற்றும் கல்கி 2898 AD ஆகியவை அடங்கும் என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு திரைப்படத் துறையும் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்கிறது என்பதை விளக்கிய நடிகர் நானி தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். டோலிவுட் கூட கடந்த ஆண்டு கடுமையான கோடையை எதிர்கொண்டது. ஆனால் பின்னர் வலுவாக மீண்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். சேமிப்பு என்பது தவறான வார்த்தை என்று நான் நம்புகிறேன். ஆனால் அதை சமநிலைப்படுத்துவது சரியான வார்த்தை என்று நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
நடிகர் நானியின் இன்ஸ்டா பதிவு:
சில நேரங்களில் தெலுங்கு கூட மந்தமாக இருக்கும. மேலும் படங்கள் 3-4 மாதங்களுக்கு வேலை செய்யாது. கடந்த கோடையில், அதன் காரணமாக நாங்கள் திரையரங்குகளை மூடிவிட்டோம். உச்ச பருவத்தில் எந்தப் படமும் கிளிக் செய்யவில்லை. நாங்கள் எப்போதும் இரட்டிப்பு சக்தியுடன் திரும்பி வருகிறோம் அது இந்தியிலும் நடக்கும் என்று அவர் பேட்டியில் கூறினார்.