எனக்கு அவரின் படைப்புகள் மிகவும் பிடிக்கும்… கோலிவுட்டின் பிரபல இயக்குநரைப் பாராட்டிய நடிகர் நானி
Actor Nani: கடந்த 2024-ம் ஆண்டு நடிகர் நானியின் நடிப்பில் சரிபோதா சனிவாரம் என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன் ட்ராமாவை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அன்புடன் நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் நானி (Nani). இவர் தெலுங்கு மொழியில் 2008-ம் ஆண்டு வெளியான அஷ்ட சம்மா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கில் தொடந்து 2010-ம் ஆண்டு வரை தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் நானி 2011-ம் ஆண்டு தமிழில் இயக்குநர் அஞ்சனா அலி கான் இயக்கத்தில் வெளியான வெப்பம் படத்தின் மூலம் தமிழி சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் (Nithya Menon) இவரக்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு ஜோசுவா ஸ்ரீதர் இசையமைத்திருந்த நிலையில் படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் நானி 2012-ம் ஆண்டு நான் ஈ படத்தில் நடித்தார். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான இந்த ஃபேண்டசி ட்ராமா படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடித்திருந்தார். படம் தமிழ் தெலுங்கு என்று ஒரே நேரத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
சமந்தாவின் எதிர் வீட்டில் இருக்கும் நானி அவரை காதலிக்கிறார். இதை அறிந்த வில்லன் சுதீப் நானியை கொலை செய்துவிடுகிறார். அதனைத் தொடர்ந்து நானி ஒரு ஈ – ஆக அடுத்த பிறவியில் பிறந்து தான் எப்படி உயிரிழந்தேன் என்று நடிகை சமந்தாவிற்கு தெரிவிய வைக்கிறார். பிறகு ஈ- ஆக இருந்து வில்லன் சுதீப்பை எப்படி பழி வாங்கினார் என்பது படத்தின் மீதி கதை.
இந்தப் படம் தமிழ் தெலுங்கு மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தென்னிந்திய அளவில் நடிகர் நானிக்கு ரசிகர்களின் வட்டம் பெரிதானது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடந்து நடிகர் நானி தமிழில் 2014-ம் ஆண்டு ஆஹா கல்யாணம் நிமிர்ந்து நில் என இரண்டு படங்களில் நடித்தார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு நடிகர் நானி தமிழில் வேறு எந்தப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மொழியில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்களை ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினர். அந்த வகையில் 2019-ம் ஆண்டு நடிகர் நானி நடிப்பில் வெளியான ஜெர்சி மற்றும் நானிஸ் கேங் லீடர் என 2 படங்களும் தெலுங்கு மட்டும் இன்றி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் நடிகர் நானி தற்போது ஹிட் 3 படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபடும் நடிகர் நானி தமிழ் சினிமாவில் பிடித்த இயக்குநர் குறித்து பேசியுள்ளார்.
அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படைப்புகள் தனக்கு பிடிக்கும் என்றும் அதிலும் மேற்கிந்திய படங்களைப் போல சினிமாட்டிங் யூனிவர்ஸை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையில் எடுத்திருப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.