கார்த்தியின் மெய்யழகன் படத்தை பாராட்டி தள்ளிய நடிகர் நானி… என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
Actor Nani About Meiyazhagan: நடிகர் நானியின் நடிப்பில் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு ஹிட் 3 படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளிலு தொடர்ந்து ஈடுபட்டுவரும் நடிகர் நானி நடிகர் கார்த்தி நடிப்பில் முன்னதாக வெளியான மெய்யழகன் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ரசிகர்களால நேச்சுரல் ஸ்டார் என்று பாசத்தோடு அழைக்கப்படுபவர் நடிகர் நானி (Actor Nani). இவரது நடிப்பில் தெலுங்கில் இறுதியாக வெளியானப் படம் சரிபோதா சனிவாரம். இந்தப் படத்தில் நடிகர் நானியுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா (SJ Surya), பிரியங்கா மோகன், அதிதி பாலன், அபிராமி, சாய் குமார், முரளி ஷர்மா, ஹர்ஷ வர்தன் என பலர் நடித்திருந்தனர். சிறு வயதில் இருந்தே யாருக்கு எந்த அநியாயம் நடப்பதைப் பார்த்தாலும் தட்டிக்கேட்கும் நபராக நடிகர் நானி இருப்பார். இவரது கோபத்தைக் கட்டுப்படுத்த அவரது அம்மா அபிராமி நானிக்கு ஒரு டாஸ்க் மாதிரி ஒன்று கொடுத்து இருப்பார். அது என்ன என்றால் ஞாயிரு முதல் வெள்ளி கிழமை வரை உனக்கு தப்பு என்று தோன்றுவது எல்லாத்தையும் ஒரு டைரில எழுதி வை அத சனி கிழமை திரும்ப படிக்கும் போது அதே கோவம் வந்தா நீ அந்த தப்ப தட்டிக்கேளு என்பது தான்.
அந்த மாதிரி எழுதி வைத்து சனி கிழமை படிக்கும் போது அந்த நிகழ்வின் மீது கோபம் பெரிய அளவில் ஏற்படவில்லை என்றால் அதை அப்படியே விட்டுவிடுவார். ஆனால் மீண்டும் படிக்கும் போது அந்த நிகழ்வின் மீது அதே கோபம் ஏற்பட்டார் அந்த தப்பிற்கு காரணம் ஆனவர்களை தேடி கண்டுபிடித்து அடிப்பார்.
அப்படி அவர் ஒரு நிகழ்வில் போலீஸாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவையும் அடித்து விடுவார். அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் ஏற்படும் அது எப்படியெல்லாம் மாறி இறுதியில் முடிவடைகிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் நானியின் நடிப்பில் இறுதியாக வெளியாகி டோலிவுட் ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகரக்ளையும் வெகுவாகக் கவர்ந்தது.
நானியின் ஹிட் 3 படம்:
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நானியின் நடிப்பில் ஹிட் 3 படம் வெளியாக உள்ளது. இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். படம் வருகின்ற 2025-ம் ஆண்டு 1-ம் தேதி மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கார்த்தியின் மெய்யழகனை பாராட்டி தள்ளிய நானி:
படத்தின் புரமோஷன் பணிகளுக்காக நடிகர் நானி தென்னிந்திய ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தமிழ் ரசிகர்களை சந்தித்துப் பேசினார். அப்போது நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த சாமி நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான மெய்யழகன் படத்தை வெகுவாகப் பாராட்டி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, தமிழ் சினிமா என்பதை மறந்துவிட்டு கடந்த 10 ஆண்டுகளில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்தப் படம் மெய்யழகன். 1000 கோடி செலவு செய்து ஒரு படத்தை எடுக்கலாம். ஆனால் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவான அந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்றும் தெரிவித்துள்ளார்.