HIT 3 : அனிருத்தின் குரலில்.. நானியின் ஹிட் 3 படத்தின் அடுத்த பாடல்!
HIT 3 Movie Thanu Song : டோலிவுட் முன்னணி கதாநாயகன் நானியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹிட் 3. பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் சைலேஷ் கொளனு இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த ஹிட் 3 படத்தின் 3வது பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் சைலேஷ் கொளனு (Sailesh Kolanu) . இவரின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ஹிட் 3 (HIT 3). இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் நானி (Nani) நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty) நடித்துள்ளார். இவர் தமிழில் விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமானது ஹிட் என்ற படத் தொகுப்பின் கீழ் அடுத்தடுத்த பாகங்களாக உருவாகி வருகிறது. இந்த தொகுப்பின் 3வது பாகமாகத்தான் ஹிட் மூன்றாவது வழக்கு என்ற படமானது உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் அதை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து தாணு என்ற 3வது பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத்தின் குரலில் உருவாகியுள்ள இந்த பாடலானது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.