Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Hit 3 : அதிரடி வன்முறைகளுடன் ரத்தம் தெறிக்க.. நானியின் ஹிட் 3 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

Hit 3 Movie Trailer : டோலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருபவர் நானி. இவரின் முன்னணி நடிப்பில் முற்றிலும் ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம்தான் ஹிட் 3. இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அதிரடி வன்முறையிலான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Barath Murugan
Barath Murugan | Published: 14 Apr 2025 12:11 PM IST

நடிகர் நானியின் (Nani) ஹிட் பட தொகுப்பில் 3வது உருவாகியுள்ள திரைப்படம் ஹிட் 3 (Hit 3)  (ஹிட்: மூன்றாவது வழக்கு). இந்த திரைப்படத்தைப் பிரபல டோலிவுட் இயக்குநர் சைலேஷ் கொலானு (Sailesh Kolanu) இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை யூனானிமஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் வால் போஸ்டர் சினிமா போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. நடிகர் நானியும் இந்த படத்தைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுப்பில் இதுவரை 2 பாகங்கள் வெளியாகி மாஸ் சம்பவத்தைச் செய்த இந்த படத்தின் மூன்றாவது பாகம் வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படமானது சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ரிலீஸின் போதுதான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் நானி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி (Srinidhi Shetty) நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிகர் கார்த்தியும் கேமியோ ரோலில் நடித்திட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன் கூடிய இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இணையதளத்தில் வெளியான இந்த ட்ரெய்லரானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Video Credits: Saregama Tamil.