Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jailer 2 : உச்ச நடிகர்களுடன் கூட்டணி… ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் இணையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

Rajinikanth Jailer 2 Movie Update : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த்தின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் படத்தைத் தொடர்ந்து, கூலி மற்றும் ஜெயிலர் 2 என இரு படங்களை தன் வசம் வைத்துள்ளார். இதில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் 2 படத்தில் பான் இந்தியத் திரை பிரபலங்கள் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பிரபலங்கள் யார் யார் என்பதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

Jailer 2 : உச்ச நடிகர்களுடன் கூட்டணி… ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் இணையும் பிரபலங்கள் யார் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 30 Apr 2025 15:45 PM

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பான் இந்தியா முழுவதும் சூப்பர் ஸ்டார் (Super Star) என்று அழைக்கப்பட்டு வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் தமிழில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வேட்டையன். (vettaiyan) இதை ஜெய் பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்றுச் சூப்ப ஹிட்டாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கூலி (Coolie) படத்தில் சிறப்பாக நடித்து வந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2  (Jailer 2)படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகி பிரம்மாண்டமாகப் பல இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் இணைந்த நடித்து வரும் நிலையில், பான் இந்திய நடிகர்களும் இணையவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் மோகன் லால், ஃபகத் பாசில், சிவராஜ் குமார், சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் எஸ்.ஜே. சூர்யா எனப் பல பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது ரஜினியின் ரசிகர்களிடையே தகவல்கள் தீயாகப் பரவி வருகிறது.

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :

இயக்குநர் நெரிசல் திலீப்குமார் முன்னதாக பேசியிருந்த வீடியோ ஒன்றில் ஜெயிலர் பார்ட் 1 படத்திலே, தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை நடிக்கவைக்க முயற்சி செய்ததாகக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் ஜெயிலர் 2 படத்திற்காகச் சிறப்பு ரோலில் நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே ஜெயிலர் 1 படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் போன்ற நடிகர்கள் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தனர் என்று அனைவருக்கும் தெரியும். அதைத் தொடர்ந்து இவர்கள் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரஜினிகாந்த்தின் இந்த ஜெயிலர் 2 படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2025, மார்ச் மாதம் முதல் தொடங்கிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்குப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...
அதிகமாக சாப்பிடுவதால் வரும் சில பிரச்னைகள்.. தடுக்கும் முறை!
அதிகமாக சாப்பிடுவதால் வரும் சில பிரச்னைகள்.. தடுக்கும் முறை!...
இன்ஸ்டாகிராமில் ஏஐ! போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!
இன்ஸ்டாகிராமில் ஏஐ! போட்டோவின் பின்புலத்தை ஈஸியா மாற்றலாம்!...
தோனிக்கு அண்ணன் இருக்கிறாரா..? முழு பூசணியை மறைத்த கதை!
தோனிக்கு அண்ணன் இருக்கிறாரா..? முழு பூசணியை மறைத்த கதை!...
நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் சேர்க்கப்பட வேண்டும்...
நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் சேர்க்கப்பட வேண்டும்......
வின்டேஜ் லுக்கில் ரசிகர்களைக் கவரும் பூஜா ஹெக்டேவின் போட்டோஸ்!
வின்டேஜ் லுக்கில் ரசிகர்களைக் கவரும் பூஜா ஹெக்டேவின் போட்டோஸ்!...
ஆதாரின் புதிய விதிமுறை: பெயர், முகவரியை எத்தனை முறை மாற்றலாம்?
ஆதாரின் புதிய விதிமுறை: பெயர், முகவரியை எத்தனை முறை மாற்றலாம்?...
ஆந்திராவில் கோர விபத்து.. அதிவேகமாக மோதிய கார்.. 6 பேர் பலி
ஆந்திராவில் கோர விபத்து.. அதிவேகமாக மோதிய கார்.. 6 பேர் பலி...
விஜய் சேதுபதியின் மகாராஜா பார்ட் 2 உருவாகிறதா? நியூ அப்டேட்!
விஜய் சேதுபதியின் மகாராஜா பார்ட் 2 உருவாகிறதா? நியூ அப்டேட்!...
கோடி ரசிகர்கள்! ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கோடி ரசிகர்கள்! ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?...