தியேட்டரில் சூப்பர் ஹிட் அடித்த மோகன்லாலின் L2: எம்புரான் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

L2: Empuraan OTT Update: 2019-ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற லூசிஃபர் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் பாகம் L 2: எம்புரான். படம் மார்ச் மாதம் 27ம் தேதி 2025ம் ஆண்டு அன்று திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தியேட்டரில் சூப்பர் ஹிட் அடித்த மோகன்லாலின் L2: எம்புரான் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

L2: எம்புரான்

Published: 

18 Apr 2025 07:12 AM

நடிகர் பிருத்விராஜ் (Prithviraj Sukumaran) இயக்கத்தில் மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் (Mohanlal) நடிப்பில் மலையாளத்தில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று L2: எம்புரான். மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது.  மேலும் மலையாள சினிமாவில் இதுவரை வெளியான படங்களின் வசூல் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி புதிய பெஞ்ச் மார்க்கை அமைத்தது. படம் வெளியாகி பல எதிர்ப்புகளை சந்தித்த போதிலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ், சுராஜ் வெம்முடு, மஞ்சு வாரியர் என பலர் நடித்திருந்தனர்.

லூசிஃபர் படத்தில் கேரள மாநிலத்தின் முதல்வர் உயிரிழந்த நிலையில் அவரது பதவிக்கு யார் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மாஸாக எண்ட்ரி கொடுப்பார் ஜதின் ராமதாஸ் (டொவினோ தாமஸ்). வெளிநாட்டில் இருந்த இவர் முதல்வராக பதவி ஏற்க கேரளா வருகிறார்.

அப்போது இவரது அக்காவின் இரண்டாவது கணவர் ஜதினை பெயரளவில் முதல்வராக வைத்துக்கொண்டு ஆட்சியை அவரது கட்டுப்பாட்டில் வைத்து நாட்டில் பல மோசடி வேலைகளை செய்ய ப்ளான் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் இந்த திட்டம் எல்லாம் முறியடிக்கப்பட்டு ஜதின் தாஸ் சிஎம்-ஆக எப்படி இருக்கிறார் என்பதே முதல் பாகம்.

கேரள மாநிலத்தில் முதல்வராக ஜதின் ராமதாஸ் பதவியேற்றப்பின் அவர் மக்களுக்கான தலைவராக இருந்தாரா அதில் இருந்து மாறினாரா என்பது இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி ஆகும். முதல் பாகத்தில் இருந்து போல இல்லாமல் இரண்டாம் பாகத்தில் முழுவதும் கரை படிந்த நபராக இருக்கிறார் ஜதின் ராம்தாஸ்.

அவரது ஆட்சியின் கீழ் மக்களுக்கு எந்தவித நல்லதும் நடக்காத காரணத்தாலும் நாட்டில் பல ஊழல்கள் நிறைந்ததாலும் முதல் பாகத்தில் நாட்டை விட்டு சென்ற லூசிஃபர் (மோகன்லால்) மீண்டும் கேரள மாநிலத்திற்கு வருகிறார். மேலும், அவர் எப்படி அந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்தார் என்பதே படத்தின் கதை.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது குறிப்பிட சிலர் இது வன்முறையை தூண்டுவதாக உள்ளது. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அதனை தொடந்து படத்தில் 27 கட்டுகள் சுமார் 2.30 நிமிடங்கள் வெட்டப்பட்டது.

ஜியோ ஹார்ஸ்டார் ஓடிடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக உள்ளது என்று அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளது.