13 நாட்கள் முடிவில் மோகன்லாலின் எம்புரான் படத்தின் வசூல் எவ்வளவு?

L2 Empuraan Box Office Collection: நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் 27-ம் தேதி மார்ச் மாதம் 2025-ம் ஆண்டு அன்று திரையரங்குகளில் வெளியான L2: எம்புரான் படம் இந்திய அளவில் இதுவரை ரூபாய் 101.15 கோடியும், உலகளவில் ரூபாய் 250 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்து அதிக வசூல் செய்த மலையாளப் படமாக மாறியது.

13 நாட்கள் முடிவில் மோகன்லாலின் எம்புரான் படத்தின் வசூல் எவ்வளவு?

எம்புரான்

Published: 

09 Apr 2025 09:28 AM

மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட L2: எம்புரான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் வளர்ச்சி மெதுவாகத் தொடங்கியுள்ளது. 13 ஆம் நாளில் படம் அதன் மொத்த வசூலில் மிதமான எண்ணிக்கையைச் சேர்த்தது. அதன்படி இந்தியாவைப் பொருத்தவரை வசூலில் ரூபாய் 101.15 கோடியாக உயர்த்தியது. படம் மார்ச் மாதம்  27-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வெளியான செய்திகளின்படி, L2: எம்புரான் படம் அதன் இரண்டாவது வார செவ்வாய்க்கிழமை ரூபாய்  1.25 கோடி வரை வசூலை ஈட்டியது. இதன் மொத்த இந்திய வசூல் தோராயமாக ரூபாய் 101.15 கோடியாக இருந்தது.

எம்புரான் படம் அதன் முதல் வாரத்தில் ரூபாய் 88.25 கோடியை வலுவாக வசூலித்தது. இந்த நிலையில் எம்புரான் படம் மலையாள மொழியில் இதுவரை வெளியான படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து மலையாள சினிமாவில் புது பெஞ்ச் மார்க்கை உருவாக்கியது குறிப்பிடதக்கதாகும்.

இரண்டாவது வார இறுதியில், L2: எம்புரான் படம் வெள்ளிக்கிழமை ரூபாய் 2.9 கோடியும், சனிக்கிழமை ரூபாய் 3.35 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூபாய் 3.85 கோடியும் வசூலித்தது. திங்கட்கிழமை ரூபாய் 1.55 கோடி வசூலித்தது, செவ்வாயன்று இதேபோன்ற எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொண்டது, அதன் இரண்டாவது வாரத்திலும் வசூலில் சீராக உள்ளது குறிப்பிடதக்கது.

உலகளவில், இந்தப் படம் தற்போது ரூபாய் 250 கோடி வசூலை எட்டியுள்ளது. அதிகாரப்பூர்வமாக இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த மலையாளப் படமாக எம்புரான் மாறியுள்ளது குறிப்பிடதக்கது. கேரளாவில் மட்டும், ரூபாய்80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் 2018 படத்திற்குப் பின்னால் இது இன்னும் பின்தங்கியுள்ளது. இது மாநிலத்தில் ரூபாய் 88 கோடிக்கு மேல் வசூலித்தது.

விமர்சனங்களைப் பெற்றாலும் L2: எம்புரான் படத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2002 குஜராத் கலவரத்தைச் சுற்றி ஒரு கற்பனைக் கதைக்களத்தை பின்னிப் பிணைந்த இந்தப் படம் சர்ச்சையைத் கிளப்பியது. சில குழுக்கள் இதை தேச விரோதம் படம் என்று அழைத்தன. CBFC தலையிட்டு, பல கட்டுகளை படத்தில் செய்தனர்.

மேலும் தயாரிப்பாளர்களும் அதனுடன் உடன்பட்டனர் – மொத்தம் 24 காட்சிகளை வெட்டி எடுத்தனர். குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டன. மேலும் திருத்தங்களுக்குப் பிறகு படத்திற்கு புதிய சான்றிதழ் கிடைத்தது. மொத்தத்தில் அசல் பதிப்பிலிருந்து 2 நிமிடங்கள் மற்றும் 8 வினாடிகள் குறைக்கப்பட்டன.

L2: எம்புரானில் நடிகர் மோகன்லால் ஸ்டீபன் நெடும்பள்ளி  அதாவது குரேஷி அப்ராம் என்ற தனது ஐக்கானிக் கதாப்பாத்திரத்தில் மீண்டும் நடித்தார். இந்த முறை, சயீத் மசூத் என்ற பாத்திரத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.