Mohanlal : இந்திய சினிமாவில் சாதனை… உலக அளவில் மோகன்லாலின் எல்2 எம்புரான் இதுவரை செய்த வசூல்?
L2 Empuraan box office collection : மலையாள முன்னணி கதாநாயகன் நடிப்பில் வெளியான படம் எல்2 எம்புரான். இந்த படத்தை முன்னணி நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியிருந்தார். கடந்த 2025, மார்ச் 27ம் தேதியில் இந்த படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது. பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான இந்த படமானது தற்போது உலகளாவிய வசூலில் சூப்பர் ஹிட்டடிதுள்ளது.

நடிகர் மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனின் (Mohanlal and Prithviraj Sukumaran) கூட்டணியில் வெளியான திரைப்படம் எல்2 எம்புரான் (L2 Empuraan) . இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியிருந்தார். அரசியல் கதைக்களத்துடன் (political storyline) வெளியான இந்த படம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த படத்தின் சில காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் குஜராத் கலவரம் (Gujarat riots) குறித்தான சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றிருந்தது. பின் அந்த படத்திலிருந்து அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. இந்த படமானது கடந்த 2025, மார்ச் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் வெளியாகியிருந்தது.
இந்த படமானது வெளியாகி 24 நாட்களைக் கடந்த நிலையில், இதுவரை உலகளாவிய வசூலில் சுமார் ரூ.325 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் கடந்த 30 நாட்களில் அதிகம் வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
A cinematic moment etched in history.
We dreamed it with you, we built it with you.
Malayalam cinema shines brighter today — together.#L2E #EmpuraanMalayalam | Tamil | Hindi | Telugu | Kannada pic.twitter.com/6DOtt178lK
— Mohanlal (@Mohanlal) April 19, 2025
இந்த பதிவில் அவர் சினிமா வரலாற்றில் பொறிக்கப்பட்ட தருணம், இந்த விஷயத்தை நாங்கள் எதிர்பார்த்ததைப் போல இந்த படம் சாதனை புரிந்துள்ளது. தற்போது மலையாள சினிமாவே ஜொலிக்கிறது என நடிகர் மோகன் லால் கூறியுள்ளார்.
எல்2 எம்புரான் திரைப்படம் :
இந்த திரைப்படத்தை இயக்குநரும், நடிகருமான பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் மோகன்லாலின் லூசிஃபர் படத்தையும் இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் 2வது பாகமாகத்தான் இந்த எல் 2 எம்புரான் திரைப்படமும் அமைந்திருந்தது. இந்த படத்தில் மோகன்லாலுடன் நடிகர்கள் பிருதிவிராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், ஆண்ட்ரியா , சாய்குமார் , பைஜு சந்தோஷ் , சுராஜ் என பல பிரபலங்கள் இணைந்தது நடித்திருந்தனர்.
இந்த படமானது முற்றிலும் அரசியல் நிறைந்த ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. கடந்த 2025, மார்ச் 27ம் தேதியில் வெளியாகி தற்போது வரையிலும் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படமானது வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதியில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் நடிகர் மோகன்லாலின் துடரும் திரைப்படம் வரும் 2025, ஏப்ரல் 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.