தமிழ் படம் 2 அப்பறம் இனிமேல் படம் பண்ணவேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் – நடிகர் மிர்ச்சி சிவா

Actor Mirchi Shiva talks about quit cinema: நடிகர் விஷாலின் மத கஜ ராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து நீண்ட நாட்களாக நடிகர் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு காத்திருக்கும் சுமோ படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி படம் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகவுள்ளது.

தமிழ் படம் 2 அப்பறம் இனிமேல் படம் பண்ணவேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் - நடிகர் மிர்ச்சி சிவா

நடிகர் மிர்ச்சி சிவா

Updated On: 

17 Apr 2025 08:35 AM

அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் மிர்ச்சி சிவா (Mirchi Shiva) முன்னதாக பேட்டி ஒன்றில் இனிமேல் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தது குறித்து பேசியுள்ளார். படங்களில் நடிப்பதற்கு முன்பு ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றினார் சிவா. அதனை தொடர்ந்து இவரை மிர்ச்சி சிவா என அழைக்கப்பட்டார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Venkar Prabhu) இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 (Chennai 28) படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் மிர்ச்சி சிவா. இந்தப் படத்தில் ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்‌ஷ்மி என பலர் நடித்திருதாலும் மிர்ச்சி சிவாவின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே தனித்து தெரியும். படத்தில் தனது அண்ணன் மகளிடம் கவிதை சொல்லி அழவைக்கும் காட்சி இன்றும் ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

அதனை தொடர்ந்து அடுத்தப் படமும் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்தார் மிர்ச்சி சிவா. சரோஜா என்ற அந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து வைபவ், எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன், வீகா தம்மோத்தியா, காஜல் அகர்வால், நிகிதா துக்ரல், சம்பத் ராஜ் என பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதற்கு முன்னதாக சென்னை 28 படமும் யுவன் இசையில் தான் உருவானது. இந்த இரண்டு படங்களின் பாடல்களும் இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படங்களை தொடர்ந்து நடிகர் மிர்ச்சி சிவா இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தமிழ் படம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதுவரை தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனா படங்களை எல்லாம் கிண்டல் செய்யும் விதமாக மிகவும் நகைச்சுவையாக அந்தப் படத்தை இயக்கியிருந்தார் சி.எஸ்.அமுதன். அதனை தொடர்ந்து கலகலப்பு, தில்லு முல்லு, சொன்னா புரியாது என காமெடிப் படங்களில் நடித்து வந்தார் மிர்ச்சி சிவா.

கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்குநராக அறிமுகம் ஆன வணக்கம் சென்னை என்ற படத்திலும் சிவா நாயகனாக நடித்திருந்தார். இதில் பிரியா ஆனந்த் நாயகியாக நடித்திருந்தார். வீடு புரோக்கர் சந்தானத்தால் இவர்கள் இருவரும் ஏமாற்றப்பட்டு ஒரே வீட்டில் தங்க நேர்கிறது. அப்போது நிகழும் சம்பவத்தை எல்லாம் நேர்த்தியாக காட்டியிருப்பார் கிருத்திகா.

இந்தப் படமும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் மிர்ச்சி சிவா ஆடிய நடனும் அதிகமாக பேசப்பட்டது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து சென்னை 28, கலகலப்பு, தமிழ் படம் ஆகியவற்றின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார் மிர்ச்சி சிவா. தமிழ் படம் 2 அறிவிப்பின் போது அவரை அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அறிமுகம் செய்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சூதுகவ்வும் 2 படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் மிர்ச்சி சிவா தற்போது இயக்குநர் ராம் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்தப் படத்திற்கு பறந்து போ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிடிவாதமாக இருக்கும் ஒரு சிறுவனும் பணம் கஷ்டத்தில் இருக்கும் அவனது தந்தையும் ஒரு பயணத்தின் போது சந்திக்கும் மனிதர்களின் மூலம் வாழ்க்கையை புரிந்துக் கொள்வதை மையமாக வைத்து இந்தப் படம் அமைக்கப்பட்டுள்ளது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

நடிகர் மிர்ச்சி சிவாவின் எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய மிர்ச்சி சிவா தான் நடிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”நான் தமிழ் படம் 2-க்கு பிறகு இனிமேல் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதற்கு காரணம் தமிழ் படம் 2 ரிலீசின் போது 4 மணி ஷோவிற்கு அவ்வளவு பேர் வந்தார்கள்.

அவர்கள் ஏதோ என் மீது இருந்த நம்பிக்கையில் தான வந்தாங்க. அவங்க சும்மா வரல டிக்கெட்டுக்கு காசு போட்டு வந்தாங்க. அப்போதான் முடிவு பன்னேன் இனிமேல் நடிக்கனும்னா நல்ல கதை உள்ள படத்தில் நடிக்கனும். இல்லைனா நடிக்க கூடாது” என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.