இணையத்தில் வைரலாகும் நடிகர் மகேஷ் பாபுவின் நியூ லுக்!
Actor Mahesh Babu: நடிகர் மகேஷ் பாபு இறுதியாக இயக்குநர் திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 2024-ம் ஆண்டு வெளியான குண்டூர் காரம் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணா, ஜெயராம், ஜெகபதி பாபு, சுனில் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தான்ர். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு ( Actor Mahesh Babu). ஆக்ஸ்ட் மாதம் 9-ம் தேதி 1975-ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் படிப்பை எல்லாம் சென்னையிலேயே முடித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு இயக்குநர் ராகவேந்த்ர ராவ் இயக்கத்தில் வெளியான ராஜகுமாருடு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார் நடிகர் மகேஷ் பாபு. தமிழில் விஜய்க்கு (Actor Vijay) எப்படி குழ்ந்தை முதல் வயதானவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனரோ அதேப் போல தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவிற்கும் குழ்ந்தை முதல் வயதானவர்கள் வரை ரசிகர்கள் உள்ளனர்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது வரவிருக்கும் படமான ‘SSMB 29’ படத்திற்காக தனது சுருள் நீண்ட கூந்தல் தோற்றத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இணையத்தில் வைரலாகும் நடிகர் மகேஷ் பாபுவின் புகைப்படங்கள்:
Waah @urstrulyMahesh ❤️🔥#SSMB29 pic.twitter.com/tf6UUveSFB
— TWTM™ (@TWTM__) April 29, 2025
அந்தப் புகைப்படங்களில், நடிகர் மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதா ஷிரோத்கர் மற்றும் ஒரு நண்பருடன் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதைக் காணலாம். புகைப்படங்கள் வெளியான பிறகு, மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவரை ‘ஷேர்’ மற்றும் ‘ஹாலிவுட் ஹீரோ’ என்று அழைத்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.
பெரும்பாலான படங்களில் ஒரே மாதிரியான தோற்றத்தை பராமரிப்பதாக அறியப்பட்ட மகேஷ் பாபு, ‘SSMB 29’ படத்திற்காக தனது தலைமுடியை நீளமாக வளர்த்தார். இந்த பிரம்மாண்டமான காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினரும் ரசிகர்களும் நம்புகிறார்கள்.
மகேஷ் பாபுவின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
‘SSMB 29’ படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் ஒரு ஷெடியூலை முடித்த பிறகு, நீண்ட ஷெடியூலுக்காக படக்குழு ஒடிசா சென்றது. ஒடிசா ஷெடியூலில் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.