Mahesh Babu: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. ஏப்ரல் 27-ல் ஆஜராக உத்தரவு!

Actor Mahesh Babu Faces Enforcement Directorate Inquiry | நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் காரணமாக இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் மகேஷ் பாபுவுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Mahesh Babu: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. ஏப்ரல் 27-ல் ஆஜராக உத்தரவு!

மகேஷ் பாபு

Updated On: 

22 Apr 2025 12:00 PM

ஹைதராபாத், ஏப்ரல் 22 : நடிகர் மகேஷ் பாபுவை (Actor Mahesh Babu)
ஏப்ரல் 27, 2025 அன்று ஹைதராபாத்தில் (Hyderabad) உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை (ED – Enforcement Directorate) சம்மன் அனுப்பியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவன வழக்கில் அவருக்கு அமலாக்கத்துறை இந்த சம்மனை அனுப்பியுள்ளது. கடந்த சில நாட்களாகவே  திரைத்துறையில் உள்ளவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தற்போது நடிகர் மகேஷ் பாபுவுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகேஷ் பாபு சம்மன் விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர், முக்கிய நடிகராக உள்ள நிலையில், அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தெலுங்கில் மட்டுமன்றி வேறு சில இந்திய மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் உடன் இணைந்து தமிழில் ஸ்பைடர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு பிரபலமான நபராக உள்ளார்.

மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை சமமன் அனுப்பியது ஏன்?

நடிகர் மகேஷ் பாபு சொர்னா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ளார். இந்த நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களும் ஒரே இடத்தை பலருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அமலாக்கத்துறை இந்த நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது. அப்போதுதான் இந்த நிறுவனங்களுக்கும் நடிகர் மகேஷ் பாபுவுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை எக்ஸ் பதிவு

அமலாக்கத்துறை கூறுவது என்ன?

நடிகர் மகேஷ் பாபு, ரூ.5.9 கோடி பணத்தை இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளார். அதில் ரூ.3.4 கோடி காசோலையாகவும், 2.5 கொடி ரொக்க பணமாகவும் பெற்றுள்ளார் என்று கூறியுள்ளது. அவர் பணம் பெற்ற நிறுவனங்கள் சட்ட விரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிலையில், நடிகர் மகேஷ் பாபுக்கு வழங்கப்பட்ட பணமும் சட்டவிரோத பண பரிவர்த்தனையின் மூலம் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.