Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind: நான் அஜித்தோட ஆளு.. மாதவனை ஷாலினி மிரட்டிய கதை!

R. Madhavan Reveals The Secret Of Shalini : கோலிவுட் சினிமாவில் 90ஸ் மற்றும் 20ஸ் ஆரம்பத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தின் மனைவியாவார். அலைபாயுதே ஷூட்டிங்கில் நடிகை ஷாலினி, மிரட்டிய விஷயம் குறித்து நடிகர் மாதவன் சொன்னதை பற்றிப் பார்க்கலாம்.

Cinema Rewind: நான் அஜித்தோட ஆளு.. மாதவனை ஷாலினி மிரட்டிய கதை!
ஷாலினி மற்றும் ஆர். மாதவன் Image Source: Social media
barath-murugan
Barath Murugan | Published: 05 Apr 2025 12:11 PM

90ஸ் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் ஷாலினி (Shalini) . இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வந்தவர். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக (child star) நடிக்கத் தொடங்கினார் இவர். இவரின் நடிப்பில் கடந்த 1983ம் ஆண்டு மலையாளத்தில், “என்டே மாமாட்டிக்குட்டியம்மாக்கு” (Ente Mamattikkuttiyammakku) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து இவருக்குத் தமிழில் முதல் படமாக  ஆனந்த கும்மி (Aanandha Kummi)  அமைந்தது. இப்படத்தை அடுத்ததாகப் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். பின் மலையாள திரைப்படத்திலேயே முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் நடிப்பில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான படம் “அனியாதிப்ராவு”. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் (vijay )  முன்னணி நடிப்பில் வெளியான “காதலுக்கு மரியாதை”  (Kadhalukku Mariyadhai) என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தை அடுத்தாக தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்தது.ஆனால் அமர்க்களம், அலைபாயுதே மற்றும் பிரியாத வரவேண்டும் என்ற சில படங்களில் மட்டும் நடித்தார். இதற்கிடையில் அமர்க்களம் படத்தின் மூலம் அஜித்  (Ajith) மற்றும் ஷாலினி இடையே காதல் மலர்ந்தது. பின் இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

பின் ஷாலினி படங்களின் நடிப்பதைத் தவிர்த்தார். அவர் தமிழில் நடித்து ஹிட்டாகிய படத்தில் ஒன்று அலைபாயுதே. இந்த படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் ஷாலினி செய்த குறும்பு பற்றி மாதவன் சொன்ன விஷயம் குறித்துப் பார்க்கலாம்.

நடிகர் மாதவன் ஷாலினியை பற்றிச் சொன்ன விஷயம் :

மாதவன் முன்னதாக பேசிய நேர்காணலில் இந்த விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார். அதில், “ஷாலினி அலைபாயுதே ஷூட்டிங்கில் எப்போது பார்த்தாலும் என்னிடம், “இங்க பார் நான் அஜித்தைக் கல்யாணம் பண்ணப்போகிறேன், அதனால் நெருக்கமான காட்சிகளில் என் பக்கத்தில் வந்து நடிக்கக்கூடாது என்றும். ரொமான்டிக் காட்சிகளில் பக்கத்தில் வந்து நடிக்கக்கூடாது தூரத்தில் நின்றுதான் நடிக்கவேண்டும் “என்று கூறுவார்.

அவர் ஷூட்டிங்கில் எப்போது பார்த்தாலும், இதையே சொல்லி மிரட்டிக்கொண்டே இருப்பார். நானும் சொல்லுவேன் இங்க பாரு என்னுடைய மனைவியும் இருக்காங்க நீயும் இப்படி எல்லாம் பண்ணக் கூடாது என்று கூறுவேன். ஆனால் ஷாலினி சொன்னது நம்பும்படி இருந்தது என்று நடிகர் மாதவனும் நகைச்சுவையாகப் பேசியிருப்பார். இந்த காட்சியானது நடிகை ஷாலினி இப்படி எல்லாம் கூட மிரட்டுவாரா என நம்மையே யோசிக்கவைக்கிறது. தற்போது அவர் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...