Kavin : குஷியில் ரசிகர்கள்.. நடிகர் கவின் கிஸ் படத்தின் நியூ அப்டேட்..!
Kiss Movie First Single Update : தமிழில் சின்னதிரையில் கதாநாயகனாக அறிமுகமாகி, தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருந்து வருபவர் கவின் ராஜ். இவரின் நடிப்பில் இறுதியாக ப்ளடி பெக்கர் என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவரின் நடிப்பில் உருவாகிவரும் படம் கிஸ். இந்த படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கிஸ் திரைப்படம்
கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் துணை மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தது வந்தவர் கவின் (Kavin). இவர் தனியார் தொலைக்காட்சி சீரியலில் (Television serial) கதாநாயகனாக நடித்துப் பிரபலமானார். அதை தொடர்ந்து சினிமாவில் “நட்புன்னா என்னானு தெரியுமா“(Natpuna Ennanu Theriyuma) என்ற படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகினார். இந்த படம் அவருக்கு போதுமான வரவேற்பைக் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
அதைத் தொடர்ந்து இவருக்கு மிகவும் பிரபலத்தைத் தந்த படம் லிப்ட் மற்றும் டாடா (Lift and Dada). இந்த இரு படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார். அதி தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த படங்கள் குவியத் தொடங்கியது. ஸ்டார் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இதை அடுத்ததாக இவரின் நடிப்பில் இறுதியாக ப்ளடி பெக்கர் என்ற படம் வெளியானது.
இது போதுமான வரவேற்பைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து இவர் நடித்து வந்த படம் கிஸ். இந்த படத்தைப் பிரபல நடனக் கலைஞர் சதீஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது வேறு எதுவும் இல்லை, இந்த படத்தின் முதல் பாடல் வரும் 2025, ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் கவின் ராஜ் வெளியிட்டுள்ளார்.
நடிகர் கவின் ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Pala varsha kanavu… Nandri Ani sir @anirudhofficial ♥️🙏🏼
A @JenMartinmusic musical ♥️
First single on 30-04-25@mynameisraahul @dancersatz @preethiasrani__ @dop_harish @peterheinoffl master #MohanaMahendiran @editorrcpranav @iamgunashekar @sonymusicsouth @SureshChandraa… pic.twitter.com/HZRYXfgegI
— Kavin (@Kavin_m_0431) April 25, 2025
நடிகர் கவினின் கிஸ் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில்தான் முதல் பாடல் வரும் 2025, ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த முதல் பாடலை பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் பாடியுள்ளார். இதை நடிகர் கவின் “பல வருச கனவு.. நன்றி அனிருத் சார்” என்று இந்த பதிவில் கூறியுள்ளார்.
நடிகர் கவினின் ப்ளடி பெக்கர் படத்தின் தோல்விக்குப் பின் இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இவர் தமிழில் அயோத்தி படத்தில் நடித்துள்ளார் எபஃது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவர்களுடன் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது.
இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிஸ் படத்தின் கதைக்களமானது முற்றிலும் காதல் கதைகளுடன் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.