Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பரபரப்பான ஷூட்டிங்கிற்கு மத்தியில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்திக்

Actor Karthik in Sabarimala: நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த சாமி நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் மெய்யழகன். தமிழில் வெளியான ஃபீல் குட் படங்களில் மிகவும் சிறந்த படமாக இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் இயக்கியிருந்தார்.

பரபரப்பான ஷூட்டிங்கிற்கு மத்தியில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Apr 2025 17:11 PM

சர்தார் 2, வா வாத்தியார் என இரண்டு படங்களின்பரபரப்பான படப்பிடிப்பிற்கு மத்தியில் நடிகர் கார்த்திக் (Karthik) சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார். பிரபல பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகனும் முன்னணி நடிகர் சூர்யாவின் (Suriya) தம்பியுமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் நடிகர் கார்த்திக். கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீர் (Ameer) இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார் நடிகர் கார்த்திக். இந்தப் படத்தில் கார்த்தியும் அவரது சித்தப்பாவாக நடித்த சரவணனின் காம்பினேஷன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கிராமத்து இளைஞராக அறிமுகம் ஆனாலும் அடுத்தடுத்து சாக்லேட் பாய், ஆக்‌ஷன் ஹீரோ என்று தமிழ் சினிமாவை வலம் வரத் தொடங்கினார் நடிகர் கார்த்திக்.

இந்த ஆண்டு நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் சர்தார் 2 படம் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி சபரிமலையில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்தப் போட்டோவில் சபரி மலைக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி பக்திமயமாக இருக்கிறார் கார்த்திக்.

இணையத்தில் வைரலாகும் நடிகர் காத்தியின் போட்டோ:

நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் பெரிய படம் சர்தார் 2. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இரண்டாம் பாகம் முதல் பாகம் வெளியான அதே தீபாவளி பண்டிகைக் காலத்தில் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது. சர்தார் படத்தின் முதல் பாகம் அக்டோபர்  மாதம் 21-ம் தேதி 2022-ம் ஆண்டு அன்று தீபாவளியின் போது வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் தயாரிப்பாளர்கள் படம் குறித்த அப்டேட்டை எப்போது அளிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி வா வாத்தியார் படத்திலும் நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் – காமெடி பாணியில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். கிருத்தி ஷெட்டி இந்தப் படத்தில் நாயகியா நடித்து வரும் நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோ இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெளியீட்டிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...