நான் பெண்ணாக பிறந்திருந்தா அந்த நடிகருக்கு லவ் லட்டர் கொடுத்திருப்பேன் – நடிகர் ஜோஜு ஜார்ஜ்
Actor Joju George: ஜகமே தந்திரம் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து நடிகர் ஜோஜு ஜார்ஜ் தொடர்ந்து புத்தம் புது காலை விடியாதா, பஃபூன், ஆதிகேசவா ஆகிய படங்களில் நடித்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் தமிழில் நடித்துள்ளார் நடிகர் ஜோஜு ஜார்ஜ்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ்
நடிகர் ஜோஜு ஜார்ஜ் (Joju George) கடந்த 1995-ம் ஆண்டு மழவில்கூடரம் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் அவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் ஜோஜு ஜார்ஜ். மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபு, நிவின் பாலி என பலரின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் நாயகனாக நடித்த ஜோஜஃப், பொரிஞ்சு மரியம் ஜோஷ், மதுரம், இரட்ட, புளிமாடா, ஆண்டனி, பனி ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படம் அனைத்தும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தமிழில் 2021-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
ஜோஜூ ஜார்ஜ் குறித்து பேசிய கமல் ஹாசன்:
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் தக்லைஃப். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அபிராமி, சான்யா மல்கோத்ரா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர். பங்கஜ் திருபாதி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாள ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. அப்போது பேசிய கமல் ஹாசன் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர். ஆனால் ஒருநாளும் அவர்கள் என்னை காதலிப்பதாக கூறவில்லை.
ஆனால் தினமும் எனக்கு காலையில் வந்த உடனேயே ஒருத்தர் எனக்கு ஐ லவ் யூ சார் என்று கத்துவார். அதுமட்டுமே என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்தது. அது வேறு யாரும் இல்லை நம்ம ஜோஜு ஜார்ஜ் தான். அவர் தினமும் தனக்கு காலையில் வரும்போதே லவ் யூ என்று கூறுவது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
ரெட்ரோ படம் குறித்து பேசிய ஜோஜூ ஜார்ஜ்:
தொடர்ந்து தமிழ் சினிமாவில் மலையாள நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இரண்டாவது முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் நடித்துள்ளார் ஜோஜு ஜார்ஜ். சூர்யா நாயகனாக நடிக்கும் ரெட்ரோ படத்தில் அவரது தந்தையாக நடித்துள்ளார் ஜோஜு ஜார்ஜ். இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்வில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசுகையில் நான் ஒரு பெண்ணாக பிறந்து இருந்தால் நிச்சயமாக நடிகர் சூர்யா சாருக்கு ஒரு காதல் கடிதமாவது கொடுத்து இருப்பேன். அவர் எப்படி இருக்கிறார் என்பதற்காகவும், அவரது அழகிற்காக மட்டும் நான் அந்த காதல் கடிதத்தை கொடுத்திருக்க மாட்டேன். அவருடைய நல்ல மனதிற்காகவும், அவருடைய கண்ணியத்திற்காகவும், அவர் செய்யும் நல்ல காரியத்திற்காவும் தான் கொடுத்திருப்பேன் என்று தெரிவித்தார்.