Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வித்யாசமான லுக்கில் நடிகர் ஹரிஷ் கல்யாண்… வெளியானது 15-வது படத்தின் அறிவிப்பு!

Harish Kalyan 15th Movie Update: கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் முதன் முதலாலக ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இதில் இரண்டாவது ரன்னராக வந்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண். ஹரிஷ் கல்யாணின் சினிமா வழ்க்கை இந்த நிகழ்சிக்கு பிறகு நல்ல நிலைக்கு சென்றது என்றே கூறலாம்.

வித்யாசமான லுக்கில் நடிகர் ஹரிஷ் கல்யாண்… வெளியானது 15-வது படத்தின் அறிவிப்பு!
நடிகர் ஹரிஷ் கல்யாண்Image Source: twitter
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Apr 2025 08:26 AM

நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) நடிப்பில் உருவாகவுள்ள 15-வது படத்தின் அறிவிப்பை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் ஹரிஷ் கல்யாண். இந்தப் படம் தான் நடிகை அமலா பாலிற்கும் (Amala Paul) அறிமுக படம் ஆகும். படம் வெளியாகி பல்வேறு நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து சட்டப்படிக் குற்றம், சந்தாமாமா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஜெய் ஸ்ரீராம் என கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து தமிழில் பொறியாளன், வில் அம்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனா படம் பெரிய அளவில் ரசிகர்களிடையே சென்றடையவில்லை.

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குநர் இளன் இயக்கத்தில் பியார் ப்ரேம காதல் படத்தில் நடித்தார் ஹரிஷ் கல்யாண். இதில் நாயகியாக அதே பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற ரைசா வில்சன் நடித்திருந்தார். இந்தப் படத்தினை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். மேலும் படத்திற்கு யுவன் தான் இசையும் அமைத்திருந்தார்.

படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து ஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார். இந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தாராளபிரபு, ஓ மனப்பெண்ணே, எல்ஜிஎம், பார்க்கிங் என சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

மேலும் கடந்த 2024-ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான் லப்பர் பந்து படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா, பாலா, தேவதர்ஷினி, காளி வெங்கட் மற்றும் ஜென்சன் திவாகர் என பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் உருவாக உள்ள அவரது 15-வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது HK 15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தை இயக்குநர் வினித் வர பிரசாத் இயக்க உள்ளார். இவர் முன்னதாக நடிகர் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!...
STR49 படத்தில் சிம்புவுடன் சந்தானம் நடிப்பது உறுதி?
STR49 படத்தில் சிம்புவுடன் சந்தானம் நடிப்பது உறுதி?...
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !...
சைலண்டாக திருமணத்தை முடித்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!
சைலண்டாக திருமணத்தை முடித்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!...
இறுதிக்கட்டத்தில் இட்லி கடை ஷூட்டிங்.. எங்கே நடக்குது தெரியுமா?
இறுதிக்கட்டத்தில் இட்லி கடை ஷூட்டிங்.. எங்கே நடக்குது தெரியுமா?...
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. எமகாதகி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. எமகாதகி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!...
ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!
ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!...
வக்ஃப் சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
வக்ஃப் சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு......
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்...
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?...