Vijay Sethupathi : விஜய் சேதுபதிக்கு வில்லனாகக் களமிறங்கும் மலையாள பிரபலம்.. அட இந்த கூட்டணியா?
Vijay Sethupathi Telugu Movie Update : கோலிவுட் சினிமாவில் துணை கதாபாத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகனாகக் கலக்க வருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தமிழில் மட்டும் 4 படங்கள் வரிசைகட்டி ரிலீஸிற்காக காத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் கதாநாயகனாகப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு வில்லனாக மலையாள பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் நடிப்பு என்ற திறமை இருந்தாலே ஜெயிக்கலாம் என அனைவருக்கும் புரியவைத்தவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) . இவரின் நடிப்பில் இறுதியாக விடுதலை பாகம் 2 (Viduthalai 2) வெளியானது. இந்த படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கியிருந்தார். விடுதலை 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமே 3 படங்களில் நடித்து வந்தார். தற்போது அந்த 3 படங்களும் படப்பிடிப்புகளை முழுமையாக நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் (Telugu) கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்தாத் (Puri Jagannadh)இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2025 மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளியானது.
அதைத் தொடர்ந்து இபாதத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்ட தூரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக மலையாள பிரபல நடிகர் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் விக்ரம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியானது தினத்தந்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதியின் படத்தின் அறிவிப்பு ;
On this auspicious day of #Ugadi ✨🙏🏻
Embarking on an electrifying new chapter with a sensational collaboration 🔥Dashing Director #PuriJagannadh and powerhouse performer, Makkalselvan @VijaySethuOffl join forces for a MASTERPIECE IN ALL INDIAN LANGUAGES ❤️🔥
Produced by Puri… pic.twitter.com/Hvv4gr0T2Z
— Puri Connects (@PuriConnects) March 30, 2025
நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இவர் அதற்கு முன் பல தெலுங்கு படத்தில் வில்லனாகவும், முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது ஹீரோவாக களமிறங்கவுள்ளார். இந்த படத்தைப் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளார். இவர் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த லைகர் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதியின் இந்த படத்தை நடிகையும் தயாரிப்பாளருமான சார்மி கவுர் இந்த படத்தைத் தயாரித்த வருகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் தபு மற்றும் ராதிகா அப்டே இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பெக்கர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த படமானது வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் தமிழில் மட்டுமே 4 படங்கள் வீதம் ரிலீசாகாமல் உள்ளது. அதில் இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகிவந்த ஏஸ் படமானது வரும் 2025, மே 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.