Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Sethupathi : விஜய் சேதுபதிக்கு வில்லனாகக் களமிறங்கும் மலையாள பிரபலம்.. அட இந்த கூட்டணியா?

Vijay Sethupathi Telugu Movie Update : கோலிவுட் சினிமாவில் துணை கதாபாத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகனாகக் கலக்க வருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தமிழில் மட்டும் 4 படங்கள் வரிசைகட்டி ரிலீஸிற்காக காத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் கதாநாயகனாகப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு வில்லனாக மலையாள பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi : விஜய் சேதுபதிக்கு வில்லனாகக் களமிறங்கும் மலையாள பிரபலம்.. அட இந்த கூட்டணியா?
விஜய் சேதுபதிImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 26 Apr 2025 12:17 PM

தமிழ் சினிமாவில் நடிப்பு என்ற திறமை இருந்தாலே ஜெயிக்கலாம் என அனைவருக்கும் புரியவைத்தவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) . இவரின் நடிப்பில் இறுதியாக விடுதலை பாகம் 2 (Viduthalai 2) வெளியானது. இந்த படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran)  இயக்கியிருந்தார். விடுதலை 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமே 3 படங்களில் நடித்து வந்தார். தற்போது அந்த 3 படங்களும் படப்பிடிப்புகளை முழுமையாக நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் (Telugu) கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்தாத் (Puri Jagannadh)இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2025 மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளியானது.

அதைத் தொடர்ந்து இபாதத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்ட தூரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக மலையாள பிரபல நடிகர் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் விக்ரம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியானது தினத்தந்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதியின் படத்தின் அறிவிப்பு ;

நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இவர் அதற்கு முன் பல தெலுங்கு படத்தில் வில்லனாகவும், முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது ஹீரோவாக களமிறங்கவுள்ளார். இந்த படத்தைப் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளார். இவர் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த லைகர் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதியின் இந்த படத்தை நடிகையும் தயாரிப்பாளருமான சார்மி கவுர் இந்த படத்தைத் தயாரித்த வருகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் தபு மற்றும் ராதிகா அப்டே இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பெக்கர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த படமானது வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் தமிழில் மட்டுமே 4 படங்கள் வீதம் ரிலீசாகாமல் உள்ளது. அதில் இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகிவந்த ஏஸ் படமானது வரும் 2025, மே 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் ஓவர்!
தனுஷின் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் ஓவர்!...
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?
ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?...
சிறந்த நடிகர் சூர்யாவா? சிவகார்த்திகேயனா? - பிரியங்கா மோகன்!
சிறந்த நடிகர் சூர்யாவா? சிவகார்த்திகேயனா? - பிரியங்கா மோகன்!...
கார் லோன் வாங்க சிறந்த வங்கிகள் எது? எப்படி தேர்ந்தெடுப்பது?
கார் லோன் வாங்க சிறந்த வங்கிகள் எது? எப்படி தேர்ந்தெடுப்பது?...
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!...
திருச்சி புளியஞ்சோலை அருவி: இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலம்
திருச்சி புளியஞ்சோலை அருவி: இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலம்...
நாங்கள் நலமுடன் இருக்கிறோம் - கொல்லப்பட்டதாக கூறப்படும் தம்பதி!
நாங்கள் நலமுடன் இருக்கிறோம் - கொல்லப்பட்டதாக கூறப்படும் தம்பதி!...
சமந்தா குறித்து பேசிய பிரபல பெண் இயக்குநர்
சமந்தா குறித்து பேசிய பிரபல பெண் இயக்குநர்...
குஷியில் ரசிகர்கள்.. நடிகர் கவின் கிஸ் படத்தின் நியூ அப்டேட்!
குஷியில் ரசிகர்கள்.. நடிகர் கவின் கிஸ் படத்தின் நியூ அப்டேட்!...
இனி ஆதார் இல்லாமல் UAN உருவாக்கலாம் - EPFO-ன் புதிய அம்சம்!
இனி ஆதார் இல்லாமல் UAN உருவாக்கலாம் - EPFO-ன் புதிய அம்சம்!...
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி...