Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் துல்கர் சல்மானின் அடுத்தப் பட நாயகி இவரா? வைரலாகும் தகவல்

Actor Dulquer Salmaan: துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் உருவாகும் காந்தா படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் சமுத்திரகணி, பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியானது.

நடிகர் துல்கர் சல்மானின் அடுத்தப் பட நாயகி இவரா? வைரலாகும் தகவல்
நடிகர் துல்கர் சல்மான்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 17 Apr 2025 07:57 AM

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் (Mammootty) மகனான துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் 1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி துல்கர் சல்மான் பிறந்தார். சினிமாவில் நடிப்பதற்கு எண்ட்ரி கொடுப்பதற்கு முன் பேரி ஜான் ஆக்டிங் ஸ்டுடியோவில் மூன்று மாத நடிப்புப் படிப்பை படித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘செக்கண்ட் ஷோ’ (Second Show) என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் துல்கர். அதனை தொடர்ந்து வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைக் கொடுத்தது. பின்னர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான ஏபிசிடி, நீலாகாஷம் பச்சைக்கடல் செவ்வண்ண பூமி, பேங்களூர் டேய்ஸ் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து  மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி,தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றார் துல்கர்.

படங்களுக்காக உடல் எடையை கூட்டுவது, குறைப்பது என பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லாமல் படங்களில் நடித்தாலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் துல்கர். அந்த வகையில் இவரது நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘லக்கி பாஸ்கர்’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கு மொழியில் உருவான இந்தப் படம் பான் இந்த அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூல் மழையையும் பொழிந்தது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஓடிடியில் வெளியான லக்கி பாஸ்கர் படம் தொடர்ந்து 13 வாரங்களாக் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் முதல் பத்து இடங்களில் பிடித்து தென்னிந்திய மொழிகளில் முதல் படம் என்ற சாதனையையும் படத்தது.

நடிகர் துல்கர் சல்மானின் இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் காந்தா என்ற தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த நிலையில் தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் மூன்று படங்கள் உருவாகி வருகின்றது.

இந்த நிலையில் பிரபல SLV தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!...
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...