TV9 Tamil NewsEntertainment > Actor Dulquer Salmaan and Nithya Menon starrer O Kadhal Kanmani completes 10 years since its release
O Kadhal Kanmani : 10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனனின் ஓ காதல் கண்மணி.. வெளியான வீடியோ!
10 Years of O O Kadhal Kanmani : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் , கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் ஓ காதல் கண்மணி. இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி இன்றுடன் 10 வருடங்களைக் கடந்த நிலையில், வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மலையாள பிரபல நடிகர் துல்கர் சல்மானின் (Dulquer Salmaan) முன்னணி நடிப்பில் தமிழில் வெளியான படம் ஓ காதல் கண்மணி (O Kadhal Kanmani). இந்த படத்தை கோலிவுட் பேமஸ் இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menon) நடித்திருந்தார். இந்த படமானது முழுக்க காதல் கதைக்களத்துடன் அமைந்திருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனனின் ஜோடி எவ்வாறு ரசிக்கப்பட்டதோ, அதைப் போல நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகை லீலா சாம்சன் இவர்களின் ஜோடியும் மிகவும் அருமையாக இருந்தது. இந்த படமானது கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியில் வெளியாகியிருந்தது. இன்றுடன் இந்த படமானது வெளியாகி சுமார் 10 வருடத்தைக் கடந்துள்ளது. இதைக் கொண்டாடும் விதத்தில் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதைப் போல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு முக்கிய பங்காற்றியது. இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் இன்று வரையிலும், ரசிகர்கள் மத்தியில் பேவரட் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.