Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush: இறுதிக்கட்டத்தில் இட்லி கடை ஷூட்டிங்.. எங்கே நடக்குது தெரியுமா?

Idly Kadai Movie Shooting Update : நடிகர் தனுஷின் முன்னணி இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகிவரும் படம் இட்லி கடை. தனுஷ் மற்றும் அருண் விஜய் முக்கிய தோற்றத்தில் நடித்துவரும் இப்படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருந்து வருகிறது. தற்போது முக்கிய காட்சிகளுக்காகப் படக்குழு தற்போது பாங்காக் சென்றுள்ளது.

Dhanush: இறுதிக்கட்டத்தில் இட்லி கடை ஷூட்டிங்.. எங்கே நடக்குது தெரியுமா?
நடிகர்கள் பார்த்திபன், சத்யராஜ் மற்றும் அருண் விஜய் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 16 Apr 2025 17:57 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் படங்களை உருவாக்கி வருபவர் தனுஷ் (Dhanush). இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் முன்னணி இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை அடுத்து உருவாகிவரும் படம் இட்லி கடை (Idly Kadai). இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் (Dawn Pictures)  நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் முன்னணி கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார். தற்போது இந்த படமானது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யும் (Arun Vijay) முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சிக்காக, இட்லி கடை படக்குழு பாங்காக் (Bangkok) சென்றுள்ளது.

தற்போது நடிகர்கள் அருண் விஜய், சத்யராஜ் மற்றும் நடிகர் பார்த்திபன் இருக்கும் புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுடன் விமானத்தில் செல்வதுபோல் நடிகர் அருண் விஜய் வெளியிட்ட பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அருண் விஜய் எக்ஸ்  தளத்தில் வெளியிட்ட பதிவு :

அதில், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் நடிகர் பார்த்திபனுடன் இருந்த நேரம் மிகவும் வேடிக்கையாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இட்லி கடை திரைப்படம் :

நடிகர் தனுஷின் இயக்கத்தில் 4வது உருவாகிவரும் படம் இட்லி கடை. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இவருகிறார். இவர் இதற்கு முன் நடிகர் தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது இட்லி கடை படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் தனுஷ், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறதாம். மேலும் இந்த படம் முதலில் 2025, ஏப்ரல் 10ம் தேதியில், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்துடன் வெளியாக இருந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையாத காரணத்தால், ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

மேலும் படமானது வரும் 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படம் 2025, ஜூன் 20ம் தேதியிலும், இந்திய உருவாகிவரும் தேரே இஷ்க் மெய்ன் படம் 2025, நவம்பர் 20ம் தேதியில் வெளியாகிறது. இந்த ஆண்டு மட்டும் தனுஷின் நடிப்பில் 3 படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு
'தாஜ்மஹால் எனக்கு சொந்தமானது' - உரிமை கோரிய நபரால் பரபரப்பு...
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? - வாஸ்து சொல்லும் டிப்ஸ் இதுதான்...
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!
ப்ரொபோஸ் செய்யும் போது நீர்வீழ்ச்சியில் விழுந்த மோதிரம் - வைரல்!...
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?
ரூ.2,000-க்கு மேல் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு GST?...
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!
மருதமலை முருகன் கோயிலுக்கு போறீங்களா? முக்கிய அறிவிப்பு இதோ!...
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி
'ஹேராம்' பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ராணி முகர்ஜி...
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!
கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்தின் மதிப்பு ரூ.350 கோடியா..!...
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?
யுவன் இசையில் விஜய் பாடிய முதல் பாடல் எது தெரியுமா?...
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!
இளையராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது? தேவர் மகனில் நடந்த சம்பவம்!...
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?
சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் - உங்க பேவரைட் எது?...
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!
கொரிய மொழியில் சரளமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர்கள் - ஷாக்கான ஜோடி!...