Dhanush: குபேரா முதல் பாடல்.. அடுத்தடுத்த அப்டேட்டால் தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி!

Kuberaa First Single : நடிகர் தனுஷின் இயக்கத்தில் இறுதியாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமானது வெளியாகியது. அதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகிவரும், இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்துப் படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Dhanush: குபேரா முதல் பாடல்.. அடுத்தடுத்த அப்டேட்டால் தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி!

நடிகர் தனுஷின் குபேரா படம்

Published: 

15 Apr 2025 17:06 PM

டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலாவின் (Shekhar Kammula)  இயக்கத்தில் தற்போது, தனுஷ் (Dhanush) நடித்து வரும் படம் குபேரா (Kuberaa) . இந்த படத்தில் நடிகர் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன், ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), நாகார்ஜுனா, என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், தற்போது படக்குழு இப்படத்தின் பாடல் குறித்த அப்டேடை கொடுத்துள்ளது. அப்படியாக தனுஷின் குபேரா படத்தின் பாடல் வரும் 2025, ஏப்ரல் 20ம் தேதியில் வெளியாகவுள்ளது.

இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

குபேரா திரைப் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

கோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து, தற்போது பாண் இந்தியா அளவிற்கு மிக பிரபலமான நடிகராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ராயன். இவரின் இயக்கத்திலும், முன்னணி நடிப்பிலும் வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை போன்ற படங்களை இயக்க தொடங்கினார்.

இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமானது வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து இட்லி கடை படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்து வந்தார். மேலும் இப்படத்தை அடுத்தக்க தெலுங்கில் குபேரா, இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் மற்றும் தமிழில் டி55, டி56 போன்ற படங்களிலும் கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு தனுஷின் படங்கள் வரிசைகட்டி நிற்கிறது.