நடிகர் தனுஷின் குபேரா படத்திலிருந்து வெளியானது பாடல் மேக்கிங் வீடியோ!
Kubera Movie Making Video: இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் வருகின்ற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என எல்லா துறைகளிலும் தனது பெயரை மிகவும் அழுத்தமாக பதிய வைத்துள்ளார் தனுஷ் (Actor Dhanush). இவர் இறுதியாக ராயன் படத்தை இயக்கி நடித்து இருந்தார். இது தனுஷின் 50-வது படம் ஆகும். இந்தப் படத்தை தானே இயக்கி நடித்து வெற்றியும் கண்டார் தனுஷ். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah), செல்வராகவன், சந்தீப் கிசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், சரவணன் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சிறு வயதிலேயே பெற்றோர்களை தொலைத்துவிட்டு ஊரைவிட்டு தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையை காப்பாற்ற சென்னைக்கு வருகிறார் நடிகர் தனுஷ்.
கைக்குழந்தையான தங்கைக்கு பால் வாங்க கூட பணம் இல்லாமல் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலையை செய்கிறார் அந்த சிறுவயது தனுஷ். அப்படி மார்க்கெட்டில் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து தனது தங்கை, தம்பிகளை நன்றாக வளர்த்து ஆளாக்குகிறார் தனுஷ். இது அணைத்திற்கும் செல்வராகவன் உதவி செய்கிறார்.
கொஞம் கொஞ்சமாக அதே மார்க்கெட்டில் கடை சொந்தமாக வீடு என வளர்கிறார் தனுஷ். தனது கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்த தனுஷ் தனது தம்பிகளாலே ஏமாற்றப்படுகிறார். ஒருபக்கம் தம்பிகளின் துரோகம் மறுபுறம் தங்கையில் அதீத பாசம். இறுதியில் தங்கையின் பாசத்திற்காக மட்டுமே வாழ நினைக்கிறார் தனுஷ்.
இந்த நிலையில் வில்லனான எஸ்.ஜே.சூர்யா எப்படி தனுஷ் வாழ்க்கைக்குள் வந்தார் அதன் பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குநர் சேகர் கம்முலா உடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டும் இன்றி இட்லி கடை என்ற படத்தை தானே இயக்கி நடித்தும் வருகிறார்.
இதுபோக இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த வரிசையில் இட்லி கடை படத்தின் வெளியீடு மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளாது. முன்னதாக ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாக இருந்த நிலையில் படத்தின் பணிகள் முடிவடையவில்லை என்று படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.
குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Step into the making of the blockbuster #Kuberaa1stSingle 🎬
A Rockstar @ThisIsDSP musical 🎶
– https://t.co/Gsn3JzGp1N#PoyivaaNanba #PoyiraaMama #JaakeAanaYaara #HogiBaaGeleya #Kuberaa1stSingle#SekharKammulasKuberaa@dhanushkraja KING @iamnagarjuna @iamRashmika… pic.twitter.com/I8qLWvc5HT
— Kuberaa Movie (@KuberaaTheMovie) April 28, 2025
அதன்படி படம் அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் குபேரா பத்திலிருந்து போய்வா நண்பா பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. அந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது பாடலின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.