ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது வீர தீர சூரன்: பாகம் 2 படக்குழு
Veera Dheera Sooran Movie OTT: நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன்: பாகம் 2. இந்தப் படத்தின் வெளியீட்டில் சில சிக்கல்களை சந்தித்த நிலையில் படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட்டும் தொடர்ந்து இழுபறியை சந்தித்து வந்தது.

நடிகர் விக்ரம் (Vikram) நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான வீர தீர சூரன்: பாகம் 2 (Veera Dheera Sooran: Part 2) சினிமா உலகில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பன்னையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் ரியா ஷிபு HR பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ஓடிடி அப்டேட் குறித்த தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே நடிகர் விக்ரமின் ஆக்ஷன் த்ரில்லர் படமான வீர தீர சூரன்: பாகம் 2 தற்போது டிஜிட்டல் வெளியீட்டிற்கான தேதியை முடிவு செய்துள்ளது. படம் வெளியாகி ஒரு மாதம் முடிவதற்கு முன்பே படத்தின் ஓடிடி வெளியீட்டில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
மார்ச் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விம்ரசன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வீர தீர சூரன்: உலகளவில் சுமார் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இது தமிழில் ஸ்ட்ரீம் செய்யப்படும், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீர தீர சூரன் படத்தில் நடிகர் விக்ரம் காளி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் வாழும் அவருக்கு முன்கதை மிகவும் அதிரடியாக இருந்தது. அந்த வேலையை விட்டுவிட்டு குடும்பத்திற்காக மளிகை கடை நடத்தி அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார் விக்ரம்.
எதிர்பாராத சூழல் காரணமாக மீண்டும் அடிதடிக்குள் செல்லும் நடிகர் விக்ரம் தனது குடும்பத்தை காக்க எந்த எல்லைக்கும் செல்வார் என்பது படத்தைப் பார்த்தவர்களுக்கு தெரியும். படத்தின் முதல் பாகத்திற்கு முன்னதாகவே படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இரண்டாம் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் முதல் பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதுகுறித்த அப்டேட்டை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.