Atharvaa : நடிகர் அதர்வாவின் முதல் படம் ‘பானா காத்தாடி’ இல்லை.. எந்த படம் தெரியுமா?

Atharvaa First Film : 80ஸ் மற்றும் 90ஸ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்தது வந்தவர் நடிகர் முரளி. அவரின் மூத்த மகன்தான் நடிகர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் முதல் படம் பானா காத்தாடி எனக் கூறப்பட்டுவந்த நிலையில், அதற்கு முன் நடிக்கவிருந்த படத்தைப் பற்றி அவர் கூறியுள்ளார்.

Atharvaa : நடிகர் அதர்வாவின் முதல் படம் பானா காத்தாடி இல்லை.. எந்த படம் தெரியுமா?

ஆனந்தம் ஆரம்பம்

Published: 

15 Apr 2025 19:26 PM

கோலிவுட் சினிமாவில் பழைய பிரபல நடிகர்களில் ஒருவர் முரளி (Murali). இவரின் நடிப்பில் பல ஹிட் படங்களில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அவரின் நடிப்பைத் தொடர்ந்து தனது மகனையும் நடிப்பில் அறிமுகப்படுத்தினார். மேலும் நடிகர் அதர்வா (Atharvaa)தற்போது வளர்ந்து நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக நிறங்கள் மூன்று (Nirangal Moondru) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தைப் பிரபல இயக்குநர் கார்த்திக் நரேன் (Karthik Naren)  இயக்கியிருந்தார். இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்ற நிலையில், இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் முதல் படமாக நடித்தது பானா காத்தாடி (Baana Kaathadi) என்று அனைவருக்குமே தெரியும்.

ஆனால் அவர் அதற்கு முன் நடிக்கவிருந்த படம் பற்றி அவரே ஓபனாக பேசியுள்ளார். அவர் தனது முதல் படம் பானா காத்தாடி இல்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் நடிக்கவிருந்த முதல் படம் ஆனந்தம் ஆரம்பம் என்ற படம் என நடிகர் அதர்வா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

நடிகர் அதர்வா பேசிய வீடியோ :

நடிகர் அதர்வா இந்த வீடியோவில், “எனது முதல் படம் பானா காத்தாடி கிடையாது, ஆனந்தம் ஆரம்பம் என்ற படம்தான். இந்த படத்தில் நான் நடிப்பதற்கு முன்னே டிராப் ஆகியது, சில தொழினுட்ப கோளாறால் இந்த படம் முழுவதும் டிராப் ஆகியது. இந்த படத்தை வேறு யாரும் இல்லை கார்த்தியின் சகுனி படத்தை இயக்கிய இயக்குநர் ஷங்கர் தயாள் தான் இந்த படத்தை இயக்கவிருந்தார். இந்த படத்தின் டிராப்பிற்கு பிறகுதான் பானா காத்தாடி படத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் அதர்வா நடித்துவரும் படங்கள் :

நடிகர் அதர்வா, நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாக நடித்தட்டுவரும் பராசக்தி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து அட்ரஸ், தணல், DNA, இதயம் முரளி என பல படங்களை தன கைவசம் வைத்துள்ளார்.

இதில் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆகாஷ் முரளியின் இயக்கத்தில் உருவாகிவரும் இதயம் முரளி படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் தகவல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக நடித்து வருகிறது. மேலும் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் எஸ்.தமன் இப்படத்தில் முக்கியமான தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.