நடிகர் ஆசிப் அலியின் நடிப்பில் வெளியானது ‘சர்கீத்’ பட ட்ரெய்லர்!
Sarkeet - Official Trailer | நடிகர் ஆசிப் அலியின் 39-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆசிப் அலி. இவரது நடிப்பில் முன்னதாக ஜனவரி மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ரேகசித்திரம் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது சர்கீத் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் தமர் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். ஹைப்பர் ஆக்டிவாக இருக்கும் ஒரு சிறுவனுக்கு பாதுகாவலராக வரும் நடிகர் ஆசிப் அலி அந்த சிறுவன் மீது ஏற்பட்ட பாசத்தால் அவரை பிரிய மனம் இல்லாமல் தவிக்கிறார். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.