குட் பேட் அக்லி படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் முதல் தேர்வு இல்லையாம் – வைரலாகும் தகவல்
Actor Arjun Das: நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் அஜிதிற்கு வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் கலக்கியிருந்த நிலையில் இவருக்கு முன்னதாக இந்த ரோலில் நடிக்க இருந்தது பிரபல நடிகர் என்ற தகவல் தற்போது வெளியாகி வைரலகி வருகின்றது.

அர்ஜுன் தாஸ்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் குட் பேட் அக்லி. ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முழுக்க முழுக்க அஜித் குமாரின் ரசிகர்களுக்காக இந்தப் படம் இருக்கும் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முன்னதாக பேட்டியில் கூறியது போல இந்தப் படம் ரசிகர்களால மாபெரும் அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அஜித்தின் முந்தைய படங்களில் ரெஃபரன்ஸ்களால் மட்டுமே இந்தப் படம் உருவாகி உள்ளது. படத்தின் கதையில் ரெஃபரன்ஸ் பார்த்திருப்போம். ரெஃபரன்ஸ் மட்டுமே படமாக இருப்பது தான் குட் பேட் அக்லி என்பது நிதர்சனமான உண்மை.
குட் பேட் அக்லி படத்தின் கதை என்ன?
நடிகர் அஜித் குமார் ஏகே என்ற ரெட் ட்ராகன் கேங்ஸ்டராக இருக்கிறார். அவரது மனைவி கதாப்பாத்திரத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் ரம்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். த்ரிஷாவின் அண்ணனாக பிரசன்னாவும் உறவினராக பிரபுவும் நடித்திருந்தார். நடிகர் சுனில் அஜித் குமாரின் நண்பராக இருக்கிறார்.
ரெட் ட்ராகன் என பெரிய கேங்ஸ்டராக இருக்கும் ஏகே விற்கு மகன் பிறக்கிறான். ஆனால் மனைவி ரம்யா ஒரு கேங்ஸ்டர் எனக்கும் என் குழந்தைக்கும் வேண்டாம். உங்க கடந்த கால வாழ்க்கையை திருத்திக்கொண்டு வந்தால் நானும் என் குழந்தையும் உங்களுடன் இருப்போம் என்று கூறுகிறார்.
தனது மகனுக்காக கேங்ஸ்டர் வாழ்க்கையை விட்டுவிட்டு செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க ஜெயிலுக்கு சென்றார் ஏகே. ஜெயிலில் தண்டனை காலம் முடிந்து தன் மகனை பார்ப்பதற்காக வெளியே வருகிறார் ஏகே. ஆனால் எதிர்பாராத விதமாக மகன் வியான் போதை மருந்து வழக்கில் ஜெயிலுக்கு செல்கிறார்.
தனது மகன் ஜெயிலுக்கு செல்ல வில்லனான அர்ஜுன் தாஸ் என்பதை கண்டுபிடிக்கிறார் ஏகே. அதனை தொடர்ந்து வில்லனை எதிர்கொண்டு தனது மகனை எப்படி ஏகே காப்பாற்றுகிறார் என்பது படத்தின் கதை. இதில் அர்ஜுன் தாஸ் டபுள் ஆக்ஷனில் கலக்கியுள்ளார். இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் எண்ட்ரிக்கு தியேட்டரே கொண்டாடியது.
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து ரசிகைகளை அதிகம் கொண்டிருப்பவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் மிகவும் சிறப்பாக காட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த கதாப்பாத்திரத்திற்கு நடிகர் அர்ஜுன் தாஸ் முதல் தேர்வு இல்லை என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதன்படி பான் இந்திய அளவில் சூப்பர் ஹிட் நடிகராக மாஸ் வில்லனாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா தான் முதல் தேர்வு என்று கூறப்படுகின்றது. பிசியான ஷெடியூலில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா நடிக்க முடியாத காரணத்தால் நடிகர் அர்ஜுன் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.