தீ விபத்துக்குப் பிறகு மகன் மார்க்கின் உடல்நிலை குறித்து அறிவித்த பவன் கல்யாண்

Pawan Kalyan Shares Sons Health Update: சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தனது இளைய மகன் மார்க் சங்கரின் உடல்நிலை குறித்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் செவ்வாய் கிழமை 08-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு மாலை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா கொனிதேலா ஆகியோர் மார்க்கின் உடல்நிலை குறித்து விசாரிக்க சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

தீ விபத்துக்குப் பிறகு மகன் மார்க்கின் உடல்நிலை குறித்து அறிவித்த பவன் கல்யாண்

பவன் கல்யாண்

Updated On: 

09 Apr 2025 07:53 AM

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண் (Pawan Kalyan) சமீபத்தில் சிங்கப்பூரில் (Singapore) நடந்த ஒரு துயரமான பள்ளி தீ விபத்தில் காயமடைந்த தனது இளைய மகன் மார்க் சங்கர் பவானோவிச் (Mark Shankar Pavanovich) உடல்நலம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். இந்த சம்பவம் ஒரு கோடைக்கால முகாமின் போது நிகழ்ந்தது, அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் காயமடைந்தனர் மற்றும் ஒரு குழந்தை அந்த விபத்தில் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் அந்த விபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் எட்டு வயதுடைய மகன் மார்க்கின் கைகள் மற்றும் தொடைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் தீ விபத்தில் புகையை அதிகமாக சுவாசித்ததால் அவருக்கு சுவாசப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை 8-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நடிகர் பவன் கல்யாண் இந்த சம்பவம் குறித்து மேலும் விவரங்களை தெரிவித்துள்ளார். அதில் புகையை உள்ளிழுத்ததன் அளவு காரணமாக தனது மகனுக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது, இது நீண்டகால உடல்நல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

நிலைமையின் தீவிரம், அவர் மூச்சுக்குழாய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்.பிரச்சனை என்னவென்றால், அது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். பிரதமர் மோடியின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர், எனக்கு அழைப்பு விடுத்து எல்லாம் சரியாகிவிடும் என்பதை உறுதி செய்ததற்காக பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கப்பூரில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மூலம் அவர் பெரும் ஆதரவை வழங்கினார். பள்ளியில் குழந்தைகள் ஒரு கோடைக்கால முகாமில் கலந்து கொள்ளவிருந்தனர். அங்கு தீ விபத்து ஏற்பட்டது. அதைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது, ​​இது ஏதோ ஒரு சாதாரண விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தேன். பின்னர் அதன் வீரியத்தை உணர்ந்தேன். இந்த விபத்தில் ஒரு குழந்தை உயிர் இழந்தது. மேலும் நிறைய குழந்தைகள் தீ காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சிங்கபூர் செல்லும் பதிவு:

சமீபத்திய தகவலின்படி, பவன் கல்யாணின் மகன் தீ விபத்தில் சிக்கிய பிறகு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா கொனிதேலா மார்க் ஷங்கரைச் சந்திக்க சிங்கப்பூர் புறப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் பவன் கல்யாண் மகனின் உடல் நிலை குறித்தும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பவன் கள்யாணை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.