அல்லு அர்ஜுன் -அட்லி கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ்!

Allu Arjun teamed up with director Atlee: நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் அட்லியின் கூட்டணி குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரங்களில் வைரலாகி வந்த நிலையில் தற்போது இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன் -அட்லி கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ்!

அல்லு அர்ஜுன் -அட்லி

Published: 

08 Apr 2025 11:56 AM

டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) இதுவரை பார்த்திராத ஒரு அற்புதமான படத்திற்காக  இயக்குனர் அட்லியுடன் (Atlee) தற்போது இணைந்துள்ளார். இது இதுவரை பார்த்திராத ஒரு அறிவியல் புனைகதை ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக AA22 மற்றும் A6 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் சிறப்பு அறிவிப்பு இன்று அல்லு அர்ஜுனின் 43-வது பிறந்தநாளான செவ்வாய்க்கிழமை 08-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. AA22 இன் அதிகாரப்பூர்வ தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் (Sun Pictures) இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர். அந்தப் பதிவில் லேண்ட்மார்க் சினிமாடிக் நிகழ்வுக்கு தயாராகுங்கள் என்றும் #AA22xA6 – சன் பிக்சர்ஸின் ஒரு மகத்தான படைப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த பெயரிடப்படாத படம் ரூபாய் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.  சினிமா வட்டாரங்களில் வெளியான தகவல்களின்படி டோலிவுட் சினிமாவில் நடிகர் மகேஷ் பாபுவுடன் SSMB29 உடன் இணைந்து நடித்த பிறகு, AA22xA6 இப்போது இரண்டாவது மிக பெரிய பட்ஜெட் படமாக மாறியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ ஆகியோர் மும்பையில் ஒரு சந்திப்பிற்காகக் காணப்பட்ட பிறகு இந்த பெரிய கூட்டணி குறித்த வதந்திகள் தொடங்கின. இப்போது, ​​அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உருவாகும் இந்தப் படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சுமார் ரூபாய் 175 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றத்.

அதோடு லாபத்தில் 15 சதவீத பங்குகளை பெற ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் அட்லி தனது சினிமா வாழ்க்கையின் 6வது படத்திற்கு ரூபாய் 100 கோடி சம்பளத்தைப் பெறுவார் என்றும், இது அவரது பிராண்ட் மதிப்பையும் பாக்ஸ் ஆபிஸ் லாபத்தையும் வெளிப்படையாக காட்டுகிறது.

இன்று ஏப்ரல் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  A6 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 2025 க்குள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் திரிவிக்ரமுக்காக அல்லு அர்ஜுனும் ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

முன்னதாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் உலக அளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.