Cinema Rewind : சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அவர்களுக்காக எதையும் செய்வேன்.. அஜித் சொன்ன விஷயம்!

Ajith Talks About Tamil Fans ; தமிழ் சினிமாவில் டாப் நாயகனாக வலம் வருபவர் அஜித் குமார். அவரின் முன்னணி நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த படமானது எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மேலும் நடிகர் அஜித் குமாரின் பழைய நேர்காணலில் படங்களிலும், இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் தமிழ் ரசிகர்களை குறித்து அவர் பேசிய விஷயம் குறித்து பார்க்கலாம்.

Cinema Rewind : சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அவர்களுக்காக எதையும் செய்வேன்.. அஜித் சொன்ன விஷயம்!

நடிகர் அஜித்குமார்

Published: 

20 Apr 2025 22:48 PM

நடிகர் அஜித் குமார் (Ajith kumar) தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர், அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவிலே முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly) . இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியுள்ளார் . இந்த படமானது வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது கார் ரேஸில் கலக்கி வருகிறார். இதுவரை நடிகர் அஜித் குமார் நடிப்பில் மட்டுமல்லாமல், இந்தியாவின் சார்பாக வெளிநாடுகளில் நடக்கும் கார் ரேஸ் (Car Race) பந்தையத்திலும் கலந்துகொண்டு வருகிறார்.

மேலும் இவரின் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் படமானது ரூ. 230 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி விழாவும் சமீபத்தில் நடைபெற்றது. மேலும் நடிகர் அஜித் எந்த நேர்காணலில் மற்றும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமாட்டார் என்றும் அனைவருக்கும் தெரிந்ததே. அவர் முன்னாள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் அவர் படங்களில் நடித்தது குறித்தும், இயக்குநர்களுடன் பேசியுள்ளார்.

பழைய வீடியோவில் தமிழ் ரசிகர்கள் குறித்து அஜித் பேசிய விஷயம் :

அந்த பதிவில் நடிகர் அஜித் குமார், “நான் இதுவரை நடித்த படங்களில் இயக்குநர்களுடன், எந்த பிரச்னைகள் எதுவும் பெரிதாக வந்ததில்லை, அதை நான் உறுதியாக கூறுவேன். பொதுவாக ஷூட்டிங்கில் சில பேர் நைட் ஷூட் பண்ணா, பகலில் நடிக்கமாட்டேன் என்பார்கள் அல்லது பகலில் ஷூட் பண்ணால் நைட் நடிக்கமாட்டேன் என்பார்கள். ஆனால் நான் ஆசை படத்துக்காக 5 நாட்களாக தொடர்ந்து, “கொஞ்சநாள் பொறு தலைவா” பாடலுக்காக ஷூட் பண்ணோம். அதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது ஒரு பிரச்னை கொடுக்கும் புது நடிகர் இப்படி 5 நாள் தொடர்ந்து நடிக்கமாட்டேன் என்று கூறுவார்.

இல்லையென்றால் உடல் நிலை சரியில்லை என்று பொய் சொல்லி கூட ஷூட்டிங்கை தடுக்க முயற்சி செய்யலாம். நான் அதை செய்யவில்லை, ஒரு வெறி இருக்கு.. எப்படியாவது சாதிக்கவேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது. என்னை அனைவரும் நார்த் இந்தியன் நடிகர் என்று நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் நான் தமிழ் மக்களால்தான் நடிகராக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். அவர்களுக்காக நான் எதையும் செய்வேன் என்று நடிகர் அஜித் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.