அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடாமுயற்சி – எப்போது தெரியுமா?

Vidaamuyarchi Television Premiere: பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் தற்போது தமிழ் புத்தாண்டை ஒட்டி ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி 2025-ம் ஆண்டு தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய இந்தப் படத்தில் அஜித் குமார் நாயகனாக நடித்திருந்தார்.

அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்... தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடாமுயற்சி - எப்போது தெரியுமா?

விடாமுயற்சி

Updated On: 

08 Apr 2025 18:57 PM

பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம். பரபரப்பான கதைக்களம் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அர்ஜுன் சர்ஜா, ஆரவ் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இருப்பினும், அஜித் குமாரின் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இந்த அதிரடி ஆக்‌ஷன் படம் மெதுவாக செல்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தது. அதே நேரத்தில் சினிமா விமர்சகர்கள் படம் ஃபாரின் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

எப்போது தெரியுமா?

இந்த நிலையில் சன் டிவி தனது தொலைக்காட்சி பிரீமியரை அறிவித்துள்ளதால் இப்போது ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தமிழ் புத்தாண்டு மற்றும் சன் டிவியின் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் விடாமுயற்சி படம் 2025, ஏப்ரல் மாதம் 14ம் தேதி  அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

சன் டிவி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இது தொடர்பாக சன் டிவி தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் விடாமுயற்சி படத்தில் இருந்து ஒரு வீடியோ க்ளிப்பை பகிர்ந்து கொண்டு படத்தின் தொலைக்காட்சி ஒளிப்பரப்பையும் அறிவித்துள்ளது. இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விடாமுயற்சி படம் ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்திலிருந்து ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் மகிழ் திருமேனி சமீபத்தில் இந்து தமிழ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தக் கதையைப் பற்றிப் பேசியுள்ளார். இந்தக் கதை என்னுடையது அல்ல. ஆரம்பத்தில் அஜித் சாரை வைத்து ஒரு ஆக்‌ஷன் த்ரில்லரை உருவாக்க விரும்பினேன்.

இருப்பினும், ஸ்கிரிப்ட் அஜித் சார் பரிந்துரைத்த ஒன்றாகும். இந்தப் படத்தில் அவர் சுமக்கும் பிம்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு வெகுஜன பொழுதுபோக்கு படம் அல்ல. எனவே ரசிகர்கள் அதை எதிர்பார்க்கக்கூடாது. அஜித் ஐயா இந்த வகையான படத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார். அதை அவர் நிஜமாக்க விரும்பினார் என்று மகிழ் திருமேனி கூறியுள்ளார்.