அஜித் குமாரின் வீரம் படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு
Veeram - Official Re-Release Trailer | நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் சமீபத்தில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு வீரம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான வீரம் படத்தின் ரீ ரிலீஸ் டெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா (Director Siruthai Siva) இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் தமன்னா, பாலா, விதார்த், சந்தானம், நாசர், ரமேஷ் கண்ணா, தம்பி ராமையா, அபிநயா, மயில்சாமி, அப்புகுட்டி, இளவரசு என பலர் நடித்திருந்தனர். படம் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஃபேமிலி செண்டிமெண்டாக இந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்தும் பாடல்களும் சூப்பர் டூப் ஹிட் அடித்திருந்தது.
சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட வசூலில் நல்ல சாதனைப் படைத்து வருகிறது. அதன்படி முன்னதாக நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான கில்லி படம் 2கே கிட்ஸ்களிடையே ஏகோபித்த ஆதரவைப் பெற்றது ரீ ரிலீஸில். அதனைத் தொடர்ந்து விஜயின் நடிப்பில் முன்னதாக வெளியான சச்சின் படத்தை சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்திருந்தனர்.
புதிதாக வெளியாகும் படங்களுக்கு திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்து காட்சி அளிப்பது போல முன்னணி நடிகர்களின் படங்களின் ரீ ரிலீஸிலும் அரங்குகள் நிறைந்து காட்சி அளிக்கின்றது. சச்சின் படமும் ரீ ரிலீஸில் கல்லா கட்டியது படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வீரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
.#Veeram Re-release Trailer Out Now ▶️ https://t.co/1u3P9dcVYG#VEERAM Release from May 1#VEERAM AK Birthday Celebration Show on 30 April Re-releasing on May 01.
Veeram is back on the big screen—bigger, louder, and more powerful than ever! Let the celebration begin as fans…
— Done Channel (@DoneChannel1) April 26, 2025
இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் முன்னதாக வெளியான வீரம் படம் தற்போது ரீ ரிலீஸிற்காக காத்திருக்கிறது. அந்த வகையில் படம் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டி மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.