Ajith Kumar : ரேஸ் நாயகன்… வெற்றிக் கோப்பைகளுடன் அஜித் குமார்.. ரசிகர்களைக் கவரும் புகைப்படம்!

Actor Ajith Kumar With The Trophy : தமிழில் முன்னணி ஹீரோவாக படங்களில் கலக்கி வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியைக் கூட கொண்டாடாமல் நடிகர் அஜித் குமார் பெல்ஜியத்தில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் பிசியாக இருந்தார். இதுவரை கார் ரேஸில் கலந்துகொண்டு, 3 கோப்பைகளைப் பெற்றுள்ளார். அவர் வெற்றிக் கோப்பைகளுடன் இருக்கும் புகைப்படமானது வைரலாகி வருகிறது.

Ajith Kumar : ரேஸ் நாயகன்... வெற்றிக் கோப்பைகளுடன் அஜித் குமார்.. ரசிகர்களைக் கவரும் புகைப்படம்!

அஜித் குமார்

Published: 

23 Apr 2025 23:30 PM

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற கதாநாயகனாகக் கலக்கி வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில், கடைசியாக குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைக் கூட பொருட்படுத்தாமல் நடிகர் அஜித் குமார் பெல்ஜியத்தில் நடந்த கார் ரேஸ் போட்டியின் பயிற்சியில் பிசியாக இருந்தார். மேலும் அந்த போட்டிக்காக அவர் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாகி நடந்து வந்த பெல்ஜியம் கார்ஸ் 24 ரேஸில் (Belgium Cars 24) , நடிகர் அஜித்தின் அணி இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு 2வது இடத்தை பிடித்திருந்தது. இதற்கு முன் நடிகர் அஜித்தின் அணி துபாய் மாறும் இத்தாலியில் நடைபெற்ற இரு கார் ரேஸ் (Car race) போட்டியிலும் 3வது இடத்தை பிடித்திருந்தார்.

திரைப்படங்களில் நடிப்பதையும் தாண்டி நடிகர் அஜித் செய்துவரும் இந்த விஷயமானது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் குமாரும் இந்தியாவின் சார்பாக அடுத்தடுத்து நடக்கும் கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் இதுவரை வென்ற 3 வெற்றிக் கோப்பைகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் தனது கையில் இதுவரை வெற்றி பெற்ற 3 கோப்பைகளுடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இணையத்தில் வைரலாகும் அஜித் குமாரின் புகைப்படங்கள் :

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களில் நடிப்பதையும் தாண்டி, இந்தியாவின் சார்பாகப் பல கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், அவரைப் பெருமைப் படுத்தும் விதத்தில் இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்துள்ளது. இந்த விருந்தானது இந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நடிகர் அஜித் குமார் சில ஆண்டுகளாக எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் சரி கலந்துகொள்ளவில்லை என்று அனைவருக்குமே தெரியும். அந்த விதத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கண்டிப்பாகக் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவில் பல அரசு ஊழியர்கள், மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தின் மொத்த வசூல் :

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்த்திரன் இயக்கத்தில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித் குமார் மற்றும் திரிஷா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது வெளியாகி இதுவரை 14 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ரூ. 140 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலானது டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தளத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.