Ajith Kumar : அஜித்தின் குட் பேட் அக்லி.. இதுவரை வசூல் செய்தது இத்தனை கோடியா?
Good Bad Ugly Movie Total Collection : தென்னிந்திய சினிமா ஸ்டார்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது நடிகராக மட்டுமல்லாமல், கார் ரேஸராகவும் கலக்கி வருகிறார். விடாமுயற்சி படத்தின் சரிவைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படமானது வெளியாகி 2 வாரங்களைக் கடந்த நிலையில், பாக்ஸ் ஆபிசில் இதுவரை வசூல் செய்த விவரங்களைப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்திற்கு முன் அவர் இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaamuyarchi) என்ற படத்தில் நடித்திருந்தார். பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படமானது எதிர்பார்க்கப்பட்ட வசூலைக் பெறாமல் தோல்வியடைந்து. இதைத் தொடர்ந்து அவர் நடித்துவந்த படம்தான் குட் பேட் அக்லி. இதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இவர் இப்படத்திற்கு முன் இறுதியாக நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்த மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்துதான் அஜித்தின் முன்னணி நடிப்பில் குட் பேட் அக்லி படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. அஜித் மற்றும் திரிஷாவின் அருமையான நடிப்பில் இந்த படம் வெளியாகி 2 வாரங்களைக் கடந்துள்ளது. மேலும் இப்படமானது இதுவரை ரூ.172. 3 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2025ம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களிலே அதிகம் வசூல் செய்துள்ள முதல் படம் என்று சாதனை படைத்துள்ளது.
குட் பேட் அக்லி படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
2 weeks gross collection in TN is 172.3 crores maamey 🔥#BlockbusterGBU
An @adhikravi sambavam
The Hit Machine @gvprakash musical #Ajithkumar sir @mythriofficial @tseries @sureshchandraa sir @trishtrashers mam @AbinandhanR @editorvijay @tseriessouth @donechannel1 pic.twitter.com/se9ImjC6F8
— raahul (@mynameisraahul) April 24, 2025
நடிகர் அஜித் குமார் 63வது படமான குட் பேட் அக்லி படத்தில், இவருக்கு வில்லனாக நடிகர் அர்ஜுன்தாஸ் நடித்திருந்தார். அவர் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர்கள் சுனில் மற்றும் பிரசன்னா அஜித்தின் நண்பர்கள் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இந்த படத்திலும் அஜித் குமாருக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகியிருந்தது. மேலும் இந்த குட் பேட் அக்லி படத்தில் பழைய பாடல்கள் இடம் பெற்றிருந்தனர். குறிப்பாக ஒத்த ரூபாய் மற்றும் தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா போன்ற பாடல்கள் முக்கியமாக இடம்பெற்றிருந்தனர். இந்த பாடல்கள் மிகவும் வைரலாகி வந்தன.
அதிலும் நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் இணைந்து நடனமாடியிருந்த தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலானது ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் அந்த பாடலானது முக்கிய பங்காற்றியது என்றே கூறலாம். இந்த படமானது ரீ ரிலீசாகி 2 வாரங்களை கடந்த நிலையிலும் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.