வெற்றிநடை போடும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் இதுவரை வசூலித்தது எவ்வளவு?

Good Bad Ugly Box Office Collection: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாகி மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை ரூபாய் 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தில் நடிகர் த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்துள்ளார்.

வெற்றிநடை போடும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் இதுவரை வசூலித்தது எவ்வளவு?

குட் பேட் அக்லி

Updated On: 

13 Apr 2025 12:56 PM

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை ரூபாய் 60 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வியாழன் அன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் வெள்ளி மற்றும் வார இறுதி நாளான சனி கிழமை வசூலில் நல்ல நிலையை எட்டியது. மேலும் படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெற்றிநடை போடும் குட் பேட் அகிலி இன்று ஞாயிறு மற்றும் நாளை விடுமுறை நாளில் வசூலி இன்னும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் வெளியான முதல் நாளிலேயே ரூபாய் 30.09 கோடி வசூலித்தது குறிப்பிடதக்கது. இந்தப் படம் இந்த 2025-ம் ஆண்டில் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான படங்களில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது .

மைத்ரி மூவிஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியர், பிரசன்னா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் வசூல் நிலவரம் குறித்து வெளியான தகவலின்படி குட் பேட் அக்லி படம் சனிக்கிழமை 12-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் ரூபாய் 17.26 கோடி வசூலித்துள்ளது.

இதன் மூலம் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூபாய் 61.51 கோடியாக உயர்ந்துள்ளது. இது நன்றாகத் தெரிந்தாலும், வெள்ளிக்கிழமை 11-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு அதன் முதல் நாள் வசூலான ரூபாய் 30.09 கோடியிலிருந்து சற்று சரிவு ஏற்பட்டது. மேலும்  இந்தப் படம் 48.72 சதவீதம் சரிந்து ரூபாய் 15 கோடி வசூலித்தது.

நடிகர்கள் அஜித் மற்றும் த்ரிஷாவின் முந்தைய படமான விடாமுயர்ச்சியை விட தற்போது குட் பேட் அக்லி படம் வசூலி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இரண்டு நாட்களில் உலகளவில் ரூபாய் 77 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடதக்கது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.