Good Bad Ugly Review: மரண மாஸ்.. திருவிழாவான தியேட்டர்.. குட் பேட் அக்லி விமர்சனம்!
Good Bad Ugly Twitter Reviews : கோலிவுட் முன்னணி நாயகன் அஜித் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது இன்று 2025, ஏப்ரல் 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்கள் பலரும் விமர்சனங்கள் கொடுத்து வருகின்றனர். அதனைப் பற்றி பார்க்கலாம்.

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) முன்னணி நடிப்பில், மாபெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது தமிழகத்தில் காலை 9 மணி காட்சிகளுடன் வெளியாகியுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. நடிகர் அஜித்தின் இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இந்த படமானது மாஸ் சம்பவங்களுடன் உருவாகியுள்ளது. விடாமுயற்சி (Vidaamuyarchi) படத்தை தொடர்ந்து, அஜித் குமார் முன்னணி கதாநாயகனாக இப்படத்தில் நடித்து வந்தார். பல எதிர்பார்ப்புகளுடன் இந்த படமானது வெளியாகி, ரசிகர்களிடையே ஓரளவே வரவேற்பை பெற்றது. மேலும் விடாமுயற்சி தோல்விக்கு பின் அஜித்தின் ரசிகர்களிடையே அடுத்த நம்பிக்கையாக உருவான படம் குட் பேட் அக்லி.
இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து, தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா என பல இடங்களில் திரையரங்குகளின் முன் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர் (Ajith Fans are celebrating) . மேலும் பல இடங்களில் அதிகாலை கட்சிகளுடன் குட் பேட் அக்லி படமானது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் சண்டை காட்சிகள், தற்போது டுவிட்டரில் வெளியாகி சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்கள் சந்தோஷத்தின் மிகுதியில் தியையரங்குகளில் எடுக்கப்படும் வீடியோவை சமூக ஊடங்களில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் தற்போது குட் பேட் அக்லி படத்தின் எக்ஸ் வலைத்தள விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம் .
குட் பேட் அக்லி படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் :
அஜித்தின் இந்த படமானது மாஸ் என்டர்டெய்னர் படமாக அமைந்துள்ளது, இந்த படமானது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக செதுக்கப்பட்ட படமாகும் அமைந்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் பாதி காட்சிகள் மிகவும் அருமையாகவும் அடித்தளமாகவும் அமைந்துள்ளது பிறகு, இரண்டாம் பாதியானது ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சிகளுடன் நன்றாக அமைந்திருக்கிறதாம். செகண்ட் ஆப் காட்சிகளை தொடர்ந்து இப்படத்தில் சண்டை காட்சிகளும் அருமையாக அமைந்துள்ளதால். ஒரு சில மாஸ் பிளாக்குகள் நன்றாக வந்துள்ளன, மேலும் அஜித்தை விண்டேஜ் முறையில் மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாகவுள்ளது என பலரும் தங்களின் கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
குட் பேட் அக்லி எக்ஸ் விமர்சனங்கள் :
#GodBadUgly review So far ,
Its out and out fan service
Mad mass 1st half
Racy 2nd half
No sentiment scenes
No boomerism
Filled with many AK movie referencesIdhukku mela enna sir venum🔥🔥#AK #GoodBadUglyFDFS pic.twitter.com/Kgx3Qp5hZA
— M̶ A̶ Y̶ A ̶ (@AkvsAnils) April 10, 2025
#GoodBadUgly #GoodBadUglyReview #FirstHalf #GoodBadUglyFromApril10
Just a 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 best entertainer from #Ajithkumar𓃵 sir in last 12-14 years. Maybe better than #Mankatha ? First 5 mins little slow, after that just a mass mass mass
— Karthik (@meet_tk) April 9, 2025
#GoodBadUgly is an Alright Out and Out Mass Entertainer that works in parts and is a pure fan service to Ajith.
After a Solid 1st half, the second half starts well with a flashback episode but has nothing much to offer after that and feels dragged till the end. A few mass…
— Venky Reviews (@venkyreviews) April 10, 2025
#GoodBadUglyreview – 2.5/5
A mass-loaded fan feast with vintage #Ajith vibes, but weighed down by a thin plot and a draggy second half
Highlights
▪️Mass Loaded
▪️Ajith in Beast Mode
▪️Vintage Swag
▪️Electrifying Moments
▪️Solid First Half
▪️Stylish ProductionCons
▪️… pic.twitter.com/xLYBo05ROR
— TollywoodRulz (@TollywoodRulz) April 10, 2025
பலவிதமான சம்பவங்களுடன் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் முதல் பிற மாநிலங்களில் ஷோவை பார்த்த ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என்றும் கூறிவருகின்றனர்