தியேட்டரில் மாஸ் காட்டும் குட் பேட் அக்லி.. இதுவரை செய்த வசூல் விவரம்!

Good Bad Ugly Box Office Collection : நடிகர் அஜித் குமாரின் 63வது படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை கோலிவுட் சூப்பர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான இப்படம் உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தியேட்டரில் மாஸ் காட்டும் குட் பேட் அக்லி.. இதுவரை செய்த வசூல் விவரம்!

குட் பேட் அக்லி திரைப்படம்

Published: 

19 Apr 2025 13:13 PM

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகக் கலக்கி வருபவர் அஜித் குமார் (Ajith kumar) . இவரின் நடிப்பில் இறுதியாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. இதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) இயக்கத்தில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித் குமாரின் 63வது திரைப்படமான இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். மேலும் இவரேதான் விடாமுயற்சி படத்திலும் அஜித்திற்கு இணையாக நடித்திருந்தார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படமானது முற்றிலும் அஜித்தின் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட படத்தை போல் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் அஜித் மொத்தமாகத் திரும்பி வந்ததை போல இந்த படம் அமைந்திருந்தது. அஜித்தின் முன்னணி நடிப்பில் வெளியான இந்த படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இன்றுடன் இந்த படம் வெளியாகி 9 நாட்களைக் கடந்த நிலையில், உலகளாவிய வசூலில் சுமார் ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படமானது சுமார் ரூ 300 கோடி பட்ஜெட்டில்  உருவான நிலையில், இதுவரை ரூ.200 கோடியை கடந்தது வசூல் செய்துவருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு :

அஜித் குமாரின் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே புதிய பாடல்கள், மேலும் பல பாடல்கள் அவரின் பழைய திரைப்படப் பாடல்களும், ஹிட் பாடல்கள் பல இந்த படத்திலிருந்தது. அதிலும் கடந்த 1999ம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் படத்தில் வெளியான “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலும் முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது. மேலும் இந்த பாடலுக்கு நடிகர் அர்ஜுன்தாஸ் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் இணைந்து நடனமாடியிருந்தனர். இந்த பாடல் இந்த படமானது மேலும் ஹிட்டாவதற்கு ஒரு காரணமாக இருந்தது என்றே கூறலாம்.

இந்த படத்தின் கதைக்களத்தைப் பொறுத்தவரைத் தந்தை மற்றும் மகனுக்கு இடையே உள்ள பாசப் போராட்டத்தை பற்றி உள்ளது என்று கூறலாம். இந்த படத்தில் அஜித் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமானது தற்போதுவரை திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போதுவரை சுமார் ரூ.200 கோடிகளை இந்த படமானது வசூல் செய்துள்ள நிலையில், இந்த வார இறுதியில் இன்னும் பல மடங்கு அதிகம் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.