Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar : நடிகர் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன்… குடியரசுத் தலைவர் கையால் விருது!

Padma Bhushan Of 2025 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பைத் தாண்டி, கார் ரேஸில் கலக்கி வருகிறார். கார் ரேஸில் வெற்றி பெற்று 2 முறை இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், அஜித் குமாரைப் பெருமை படைத்தும் விதமாக இந்திய அரசு அவருக்குப் பத்ம பூஷன் விருதை அறிவித்திருந்தது. தற்போது அந்த விருது வரும் 2025, ஏப்ரல் மாதத்தில் இதில் வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ajith Kumar : நடிகர் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன்… குடியரசுத் தலைவர் கையால் விருது!
நடிகர் அஜித் குமார் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 17 Apr 2025 21:11 PM

தெலுங்கு சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து, தற்போது தென்னிந்தியப் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் தற்போது திரைப்படங்களில் நடிப்பது ஒரு புறம் இருந்தாலும், வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸ் (Car race) பந்தையத்தில் கலந்துகொண்டு வருகிறார். இதுவரை இவர் இத்தாலி மற்றும் துபாயில் (Italy and Dubai) நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் 3வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றிருந்தார். இதுவரை கலந்துகொண்ட இரு கார் ரேஸ் போட்டியிலும் 3வது இடத்தைத்தான் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சார்பாகத் தனது அணியுடன் இந்த போட்டிகளில் கலந்துகொண்டார். இதுவரை இந்தத் நடிகரும் இந்த மாதிரியாக கார் ரேஸில் இந்தியாவின் சார்பாகப் போட்டியில் கலந்துகொண்டது இல்லை. மேலும் இந்தியாவின் நடிகர்களின் தனித்துவமாக நடிகர் அஜித் குமார் இருந்து வருகிறார். இந்நிலையில், அவரை பெருமைப் படுத்தும் விதத்தில் இந்திய அரசு (Government of India) அவருக்குப் பத்ம பூஷன் (Padma Bhushan) விருதை அறிவித்திருந்தது.

மேலும் தற்போது வெளியான தகவலின் படி, நடிகர் அஜித் குமாருக்கு, வரும் 2025ம் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் விருது வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமாருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் வழங்கவுள்ளார். இந்த விருது வழங்கும் விழாவானது 2025ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்திற்குப் பத்ம பூஷன் விருது ;

வரும் 2025ம் ஆண்டு குடியரசு தனத்தை முன்னிட்டு நடிகர் அஜித் குமாருக்கு, இந்திய அரசின் சார்பாகப் பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார். இந்த விருது வழங்கும் விழாவானது 2025, ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் நடிகர் அஜித் குமார் நிச்சயம் கலந்துகொள்வார்.

இதுவரை அரசு, மற்றும் திரைப்படங்கள் நிகழ்ச்சி என எதிலும் கலந்துகொள்ளாத அஜித் குமார் நிச்சயமாக விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வார். தற்போது இந்த தகவலானது அஜித் குமாரின் ரசிகர்கள் மத்தியிலும், ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பத்ம பூஷன் விருதுபெற்ற நடிகர்கள் :

கோலிவுட் சினிமாவில் பல நடிகர்கள், நடிகைகள் இருந்தாலும் , சில நடிகர்கள் மட்டுமே பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளனர். அதில் முதன் முதலில் தமிழ் சினிமாவில் விருது பெற்றவர் சிவாஜி கணேசன். இவருக்குக் கடந்த 1984ம் ஆண்டு இந்திய அரசால் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்திற்குக் கடந்த 2000ம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. மூன்றாவதாக நடிகர் கமல் ஹாசனுக்கு கடந்த 2014ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த்தின் மறைவிற்குப் பின் கடந்த 2024ம் ஆண்டு அவருக்கும் கொடுக்கப்பட்டது. இந்த வரிசையில் தற்போது நடிகர் அஜித் குமாரும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ...
சீலம்பூர் கொலை: "லேடி டான்" என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை:
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!...
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?...
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?...
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!...
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்...
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!...
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!...
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டம் - 2 ஆம் கட்ட சோதனை எப்போது?
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டம் - 2 ஆம் கட்ட சோதனை எப்போது?...
ராசியை மாற்றும் சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!
ராசியை மாற்றும் சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!...