தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்… பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
Actor Ajith Kumar: பெல்ஜியத்தில் நடந்த ஸ்பா ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினரின் வெற்றி குறித்து குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அஜித் மற்றும் அவரது குழுவினர் குறிப்பிடத்தக்க P2 போடியம் ஃபினிஷிங்கைப் பெற்றிருப்பது இந்திய மோட்டார்ஸ்போர்ட்டிற்கு பெருமையான தருணம் என்று அவர் கூறியுள்ளார்.

அஜித் குமார்
நடிகர் அஜித்குமார் (Ajith Kumar) தொடர்ந்து படங்களின் நடிப்பது மட்டும் இன்றி கார் ரேஸிலும் (Car Race) கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக துபாயில் நடைப்பெற்ற கார் பந்தையில் வெற்றிப்பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதற்கு இடையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் பெல்ஜியத்தில் நடைப்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடத்த கார் பந்தையத்தில் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இந்த கார் பந்தையத்தில் நடிகர் அஜித் குமாரின் குழு இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸுக்கு மிகவும் பெருமையான தருணம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அஜித் குமார் உடன் இனைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், சுனில், பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர் என பலர் நடித்திருந்தனர்.
படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக கார் பந்தையத்திலும் நடிகர் அஜித் தொடர்ந்து சாதனைப் படைத்து வருகிறார். பெல்ஜியத்தில் உள்ள மதிப்புமிக்க ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் அஜித் குமாரின் குழு ஒரு சாதனையைப் படைத்துள்ளது. இது அஜித்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மோட்டார் விளையாட்டுக்கும் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது.
சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A proud moment for Indian motorsport!#AjithKumar and his team secure a remarkable P2 podium finish at the prestigious Spa Francorchamps circuit in Belgium. A testament to passion, precision, and perseverance on the global racing stage.#AjithKumar #AjithKumarRacing #AKRacing…
— Suresh Chandra (@SureshChandraa) April 20, 2025
இதுகுறித்து சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, ”இந்திய மோட்டார் விளையாட்டுக்கு ஒரு பெருமையான தருணம். பெல்ஜியத்தில் உள்ள மதிப்புமிக்க ஸ்பா ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் குறிப்பிடத்தக்க P2 போடியம் ஃபினிஷிங்கைப் பெற்றனர். உலகளாவிய பந்தய மேடையில் ஆர்வம் மற்றும் விடாமுயற்சிக்கு இது ஒரு சான்று என்று தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The crowd swells, and so does the love!
People of Belgium form a beeline to meet their idol!
In cinema and sports, #AK continues to spread positivity wherever he goes!
A true global icon#AjithKumar #AjithKumarRacing #AKRacing #GT4Europe #SpaFrancorchamps #PodiumFinish #P2 pic.twitter.com/FPJn68ayMk— Suresh Chandra (@SureshChandraa) April 20, 2025
தொடர்ந்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் மேடையில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, கொண்டாட்ட தருணத்தில் திளைக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அஜித் தனக்கு முன்னால் முடித்த வெற்றியாளர்களைப் பாராட்டி, அவர்களின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது அந்த வீடியோவில் தெரிகிறது.