நாம் ஒவ்வொரு மதத்தையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் – பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நடிகர் அஜித் கருத்து

Actor Ajith Kumar: ஏப்ரல் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெறும் பெருமைமிக்க தருணத்தைக் காண நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி மற்றும் அவர்களது குழந்தைகளும் வந்திருந்தனர்.

நாம் ஒவ்வொரு மதத்தையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் - பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நடிகர் அஜித் கருத்து

நடிகர் அஜித் குமார்

Updated On: 

29 Apr 2025 07:55 AM

நடிகர் அஜித் குமாருக்கு (Ajith Kumar) இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே சிறப்பான ஆண்டாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து 2 படங்கள் வெளியாகி ஹிட் அடித்தது. கார் பந்தையங்களில் (Car Race) 3  பரிசுகளை வென்றுள்ளார். தற்போது நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதையும் தற்போது பெற்றுள்ளார். அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே அஜித் குமார் தொடர்ந்து துபாய், இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் மூன்று பந்தயங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றார். இப்படி தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் மகிழ்ந்து வரும் அஜித் குமாருக்கு 28-ம் தேதி மார்ச் மாதம் 2025-ம் ஆண்டு குடியரசு தலைவர் பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார்.

பத்ம பூஷன் விருதைப் பெற்ற நடிகர் அஜித் குமார்:

மதிப்புமிக்க பத்ம பூஷன் விருது விழாவிற்குப் பிறகு நடிகர் அஜித் குமார் தனது வருத்தத்தைத் தெரிவித்து, துயரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். ஏப்ரல் மாதம் 22-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று காஷ்மீரின் பஹல்காமில் உள்ள மினி சுவிட்சர்லாந்து என்றும் அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அஜித் குமார், தாக்குதலை கடுமையாகக் கண்டித்து மனமார்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டார். “அனைத்து குடும்பங்களுக்கும் என் இதயம் செல்கிறது, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் தங்களால் இயன்றதைச் செய்கிறது என்று நான் நம்புகிறேன். நம் விரல்களைக் கட்டிப்பிடித்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பச்சாதாபம் கொள்ளக் கற்றுக்கொண்டு, பின்னர் நமது அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியான சமூகமாக வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம்” என்று கூறினார்.