Ajith Kumar : அதை நான் சுத்தமாக விரும்புவதில்லை.. எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்- அஜித் குமார்!
Ajith Kumar Speech : தமிழ் சினிமாவில் சிவாஜி, ரஜினி மற்றும் கமல்ஹாசன் வரிசையில் பத்ம பூஷன் விருதைப் பெற்றவர் அஜித் குமார். கோலிவுட் சினிமாவின் நம்பர் 1 நட்சத்திரமாக இருக்கும் இவருக்கு, இந்திய அரசு பத்ம பூஷன் விருதைக் கொடுத்துக் கவுரவித்துள்ளது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பின் நேர்காணல் ஒன்றில் பேசிய அஜித் குமார் படங்களில் நடிப்பதைக் குறித்தும், தனது பெயரின் முன்னாள் வேறு பெயர்களை வைத்து அழைப்பது விருப்பமில்லை என்பது குறித்துப் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் (Car racing) கவனம் செலுத்தி வருகிறார். இவர் இதுவரை வெளிநாடுகளில் நடந்த 3 கார் ரேஸ் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதுவரை இந்தியாவின் சார்பாகக் (India) கலந்துகொண்ட போட்டிகளில் இரு முறை 3வது இடத்தையும், ஒரு முறை 2வது இடத்தையும் பிடித்துள்ளார். நடிகர் அஜித் குமார் சினிமாவைக் கடந்து இந்தியா சார்பில் கார் ரேஸிலும் சாதனை படைத்துவரும் நிலையில், இந்திய அரசு (Government of India) அவருக்குப் பத்மபூஷன் விருதைக் கொடுத்துள்ளது. இந்த 2025ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன் (Padma Bhushan) விருது கிடைத்துள்ளது. இதைக் கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் பலரும் பலவிதமான சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் அஜித் குமார் பொதுவாக எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் சரி, அரசு நிகழ்ச்சிகளும் சரி சமீப ஆண்டுகளாகக் கலந்துகொள்வதில்லை. ஆனால் இந்த பத்மபூஷன் விருது வழங்கும் விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு விருதைப் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று 2025, ஏப்ரல் 29ம் தேதியில் நேர்காணல் ஒன்றில் தொலைப்பேசி மூலம் கலந்துகொண்டார்.
அதில் பேசிய அஜித் குமார் தான் எப்போது எளிமையாக இருக்க விரும்புவதாகவும், எனது பெயரின் முன்னால் மற்ற பெயர்களை வைத்து அழைப்பதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.இவர் பேசிய விஷயமானது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் பேசிய வீடியோ :
#SuperStar & #Thala ?#Ajithkumar – I don’t like all these prefixes to name. I prefer being called as #AJITH or #AK.
– I’m actor by profession & getting paid for it. Fame & Fortune are byproducts of job. Trying to keep life simple.pic.twitter.com/kC43NvXBEJ— Movie Tamil (@MovieTamil4) April 29, 2025
இந்த வீடியோவில் பேசிய அஜித் குமார், எனது பெயரின் முன்னாள் மற்றொரு பெயரை வைத்து அழைப்பதை நான் சுத்தமாக விரும்புவதில்லை. என்னை மற்றவர்கள் அஜித் குமார் அல்லது AK என்று அழைத்தால் போதும். நடிப்பு எனது வேலை, நடிப்பதற்காக நான் சம்பளமும் வாங்குகிறேன். எனக்குப் புகழும் சரி, அதிர்ஷ்டமும் சரி எனது வேலையினால் கிடைத்த சன்மானம்தான். மேலும் நான் எப்பொழுதும் எளிமையாக இருப்பதையே விரும்புகிறேன் என்று நடிகர் அஜித் குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.
குட் பேட் அக்லி திரைப்படம் :
நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படமானது வெளியாகி எதிர்பாராத வரவேற்பைக் கொடுத்து நடிகர் அஜித் குமாருக்கு நல்ல வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் த்ரிஷா, அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்பாராத வரவேற்பைப் பெற்றுவரும் இந்த படமானது, தற்போதுவரை ஒரு சில திரையரங்குகளில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.