Good Bad Ugly: அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியான AK The Tiger பாடல்!
Good Bad Ugly Movie 3rd Single : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் ரிலீசான இப்படத்தின் மூன்றாவது பாடலான Ak The Tiger என்ற பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) 63வது திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தில் அஜித்துடன் நடிகை த்ரிஷா (Trisha) இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) இயக்கத்தில் வெளியான இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜித்தின் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதைப் போல் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு ஏற்றவாறு, இந்த படத்தின் சில காட்சிகள் அமைந்துள்ளது. தளபதி விஜய்யின் படங்களில் உள்ள வசனங்கள் போன்றவை இப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த காட்சிகளானது விஜய்யின் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் குமார் இந்த படத்தில் வின்டேஜ் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. அஜித்தின் இப்படத்திற்கு அவரின் ரசிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் தற்போது 3வது பாடல் வெளியாகியுள்ளது.
Video Credits : T-Series Tamil.