Good Bad Ugly: அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்.. சுரேஷ் சந்திரா சொன்ன ஒரே வார்த்தை!
Good Bad Ugly Celebration : கோலிவுட் முன்னணி ஹீரோ அஜித் குமாரின் நடிப்பிலும், பிரம்மாண்ட எதிர்பார்ப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை தமிழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படமானது 2025, ஏப்ரல் 10ம் தேதி காலை 9 மணி காட்சிகளுடன் தமிழகம் எங்கும் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் திரையரங்குகளின் முன் குட் பேட் அக்லி ரிலீஸை கொண்டாடி வருகின்றனர்.

குட் பேட் அக்லி திரைப்படம்
நடிகர் அஜித் குமாரின் (Ajith kumar) 63வது திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த திரைப்படமானது இன்று 2025, ஏப்ரல் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியுள்ளார். இவரின் முன்னணி இயக்கத்தில் இப்படத்தில் நடிகர் அஜித் குமார் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித்தின் மாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, புஷ்பா (Pushpa) படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ள இப்படத்தின் கொண்டாட்டங்கள் (Good Bad Ugly Celebration) நேற்று மாலை முதலே தொடங்கியது. தமிழகத்தில் காலை 9 மணி காட்சிகள் முதல் குட் பேட் அக்லி படமானது திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளின் முன் பிரம்மாண்ட பேனர் வைத்து, மேளதாளத்துடன் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பார்வையிட சென்றுள்ளார். தற்போது அவர் இருக்கும் வீடியோவானது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் ரசிகர்களிடம் காமெடியாக பேசிக்கொண்டு அவர் திரையரங்கினுள் நுழையும் காட்சியானது வைரலாகி வருகிறது.
அவர், “ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றத்தை நடத்தியிருக்கலாம். மன்றம் இல்லாதப்பவே இவ்வளவு கலாட்டா பண்றீங்க” என ரசிகர்களை செல்லமாக கடிந்து கொண்டார்.
குட் பேட் அக்லி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் :
Suresh mams at Rohini #GoodBadUgly pic.twitter.com/ekdh5XXaNG
— Trollywood 𝕏 (@TrollywoodX) April 9, 2025
Ahhhahhhh🥹🔥⚡⚡⚡⚡#Thala #Ajithkumar𓃵 #GoodBadUgly #GoodBadUglyFromApril10 pic.twitter.com/59SbCY9t85
— 😈ᴿᴱᴰ DRAGON😈 (@Kumar__25__) April 10, 2025
Celebration starts at @murugancinema 🥳🕺💥
Team @Akcommunitycbe done Excellent celebration 📈🔥#GoodBadUgly | #Ajithkumar𓃵 | #GoodBadUglyFDFS | #GoodBadUglyFromApril10 pic.twitter.com/unegM0lP88
— Parthaaaa (@Parthaaaa6969) April 10, 2025
நடிகர் அஜித் குமாரின் இந்த குட் பேட் அக்லி படமானது சுமார் ரூ.300 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பான் இந்திய பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு முன் நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார். இப்படமும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய நிலையில், மக்களிடையே அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தை அடுத்ததாக அஜித் நடித்துவந்த திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்திற்கு இணையாக த்ரிஷா கிருஷ்னண் நடித்துள்ளார். மேலும் நடிகை சிம்ரன், நடிகர்கள் சுனில், அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரசன்னா, பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
குட் பேட் அக்லி வெற்றியாக அமையுமா? :
இந்த படமானது இன்று 2025, ஏப்ரல் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், பலரும் பல எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர். மேலும் பல மாநிலங்களில் அதிகாலை காட்சிகளுடனும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது அதன் பெயருக்கு ஏற்றவாறு திரைப்படத்தின் கதைக்களமும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த படமானது அஜித்தின் ரசிகனாக இருந்து அவரின் ஒட்டுமொத்த படத்தையும் ரசிக்கும் படி ஒரே திரைப்படமாக அமைந்துள்ளது என்றும் பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 10 பவுன் தங்கம் :
ரசிகர்களின் கொண்டாட்டத்தில் குட் பேட் அக்லி படமானது இருந்துவரும் நிலையில், மதுரை அஜித் ரசிகர்கள் இணைந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 10 பவுன் தங்க செயின் வாங்கி வைத்துள்ளனர். இந்த குட் பேட் அக்லி திரைப்படமானது எதிர்பார்த்த வெற்றி பெற்று, இந்த படத்தின் வெற்றி விழாவின் போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அணிவிக்கவுள்ளதாகவும் அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் அஜித்தின் இந்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் கொண்டாட்டமானது, பல இடங்களில் உள்ள திரையரங்குகளில் சிறப்பாக நடந்து வருகிறது. ரசிகர்கள் நேற்று மாலை முதலே திரையரங்குகளின் முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.