Ajith Kumar : இத்தனை கோடியா? குட் பேட் அக்லி படத்தின் 2வது நாள் வசூல் விவரம்!

Good Bad Ugly 2nd Day Collection : கோலிவுட் சினிமாவில் மாஸ் நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார் . இவரது முன்னணி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் 2வது நாள் வசூல் விவரம் குறித்து பார்க்கலாம்.

Ajith Kumar : இத்தனை கோடியா? குட் பேட் அக்லி படத்தின் 2வது நாள் வசூல் விவரம்!

குட் பேட் அக்லி படம்

Published: 

12 Apr 2025 07:04 AM

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணனின் (Ajith Kumar and Trisha Krishnan) முன்னணி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த திரைப்படமானது மாஸ் கதைக்களத்துடன் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித்தும் யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தின் கதைக்களமானது, அஜித்தின் ஹிட் படங்களிலிருந்த காட்சிகளை மீண்டும் புதிய படத்தின் மூலம் திரைக்குக் கொண்டுவரும் விதத்தில் மாஸ் சம்பவம் செய்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

அஜித்தின் இந்த 63வது திரைப்படத்தில் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்து திரையரங்கத்தையே அதிரவைத்தார். இவ்வாறு மாஸ் நடிகர்களின் கூட்டணியில் அஜித்தின் இந்த படமானது ஒட்டுமொத்த ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியது. மேலும் தற்போது இரண்டு நாட்களைக் கடந்த அஜித்தின் இந்த படமானது இதுவரை ரூ.42.75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலானது sacnilk இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படமானது முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.30.9 கோடிகளைப் பெற்று பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் நடிகர் அஜித்தின் நடிப்பில் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் வசூல் செய்த படம் என்று குட் பேட் அக்லி திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

குட் பேட் அக்லி படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த படத்திலும் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் பெரிய அளவிற்கு இல்லை என்றே கூறலாம். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெரிய நடிகர்களின் படங்களில் கதாநாயகிகளுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப் போல இந்த குட் பேட் அக்லி படத்திலும் த்ரிஷாவிற்கு முக்கியத்துவமான காட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இந்த படத்தில் வில்லன் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக, நடித்த மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலுக்கு அஜித்தின் தார் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் என இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டிங் லிஸ்டில் இருக்கிறது.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வெளியான பாடல்களைத் தொடர்ந்து, இவரின் பின்னணி இசையும் மாஸ் சம்பவம் செய்துள்ளது. மேலும் பல காட்சிகளில் பின்னணி இசையானது முக்கியமாக அமைந்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய படமானது தற்போது திரையரங்குகளில் மாஸ் சம்பவம் செய்து வருகிறது.