மமிதா பைஜுவின் மிஸ் பண்ணக்கூடாத 5 படங்கள் – உங்கள் சாய்ஸ் எது?
ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் கிரேஸ் காரணமாக தமிழிலில் விஜய்யுடன் ஜனநாயகன், பிரதீப் ரங்கநாதன் என வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சர்போரி பலக்காரன் (Sarpori Palakkaran) படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த நிலையில் பிரமேலு படத்தின் காரணமாக பிரேக் கிடைத்திருக்கிறது. மமிதா நடிப்பில் மிஸ் செய்யக் கூடாத 5 மலையாளி படங்களை பார்க்கலாம்.

மமிதா பைஜு
நேரம், ராஜாராணி படங்களில் தனது குறும்புத் தனமான நடிப்பால் ரசிகர்களன் மனதில் சட்டனெ இடம் பிடித்தார் நஸ்ரியா. அவருக்கு பிறகு தற்போது மலையாளத்திலிருந்து வந்து ரசிகர்களின் மனங்களை ஆக்கிரமித்திருப்பவர் மமிதா பைஜு (Mamitha Baiju). கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு (Premalu) படத்தின் மூலம் கிரஷ் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறார். ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் கிரேஸ் காரணமாக தமிழிலில் விஜய்யுடன் (Vijay) ஜனநாயகன், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம், பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) படம் என வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சர்போரி பலக்காரன் (Sarpori Palakkaran) படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த நிலையில் பிரமேலு படத்தின் காரணமாக அவருக்கு பிரேக் கிடைத்திருக்கிறது. மமிதா நடிப்பில் மிஸ் செய்யக் கூடாத 5 மலையாளி படங்களை பார்க்கலாம்.
ஆபரேசன் ஜாவா (Operation Java)
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். கொலை, ஆன்லைன் மோசடி போன்ற வழக்குகளை விசாரிக்கும் சைபர் கிரைம் போலீசாருக்கு இரண்டு இன்ஜினியரிங் மாணவர்கள் உதவுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தில் மமிதா, அல்போன்சா என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கோ கோ (Kho Kho)
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்தப் பட்ததை ராகுல் ரிஜி நாயர் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் மரியா ஃபிரான்சிஸ் என்ற கோ கோ பயிற்சியாளருக்கும் அவரது மாணவி அஞ்சு என்பவருக்குமான கதை. அஞ்சுவாக இந்தப் படத்தில் மமிதா பைஜு நடித்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில் இந்தப் படத்தை பார்க்கலாம்.
சூப்பர் சரண்யா (Super Sharanya)
இந்தப் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பிரேமலு இயக்குநர் கிரிஸ் ஏ.டி. இயக்கியிருக்கிறார். சீனியர்களின் ராகிங் போன்ற தொல்லைகளால் பாதிக்கப்படும் சரண்யா தனது தோழிகளின் ஆதரவால் தன்னம்பிக்கை பெறுகிறார். அந்நேரத்தில் தீபு என்ற இளைஞன் அவளுடைய வாழ்க்கையில் நுழைய, அவள் தனது பயங்களை எதிர்கொண்டு, தனது வாழ்க்கையை எப்படி கட்டமைக்கிறாள் என்பதே இதன் கதை. பிரேமலு படத்துக்கு முன் நஸ்லென், மமிதா இணைந்து நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஜி5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
பிரணய விலாசம் (Pranaya Vilasam)
சூப்பர் சரண்யாவின் வெற்றிக்கு பிறகு அர்ஜுன் அசோகன், மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் நடித்திருக்கும் படம். இந்தப் படத்தை நிகில் முரளி இயக்கியிருக்கிறார். இறந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக தந்தையும் மகனும் மேற்கொள்ளும் பயணத்தில் அவரது பழைய காதல் குறித்து அவர்களுக்கு தெரியவருகிறது. அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. கோபிகா என்ற வேடத்தில் மமிதா நடித்திருக்கிறார். இந்தப் படம் ஜி5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
Premalu (பிரேமலு)
பகத் பாசில், ஷியாம் புஷ்கரன், திலீஷ் போத்தன் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்த இந்தப் படம் கிரிஸ் ஏ.டி இயக்கியிருக்கிறார். ஹைதராபாத்தில் ரீனுவை பார்த்த மாத்திரத்தில் காதல்கொள்கிறார் சச்சின் அதன் பிறகு இருவருக்குள்ளும் முரண், எதிர்பாராத சிக்கல்கள் ஆகியவற்றின் காரணமா சவால்களை எதிர்கொள்கிறார். கடந்த வருடம் வெளியான இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.