ஒரே கட்டமாக ரூ.2.25 கோடி ? மாதம் ரூ.84,000? எந்த ஓய்வூதிய திட்டம் சிறந்தது?
Retirement Plan: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்கால ஓய்வூதியத் திட்டத்தை 2025, ஜூன் மாதத்திற்குள் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தேசிய ஓய்வூதிய திட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டில் எந்த திட்டம் சிறந்தது என்று இந்த பதிவில் காணலாம்.

மாதிரி புகைப்படம்
இன்றைய காலத்தில் ஓய்வூதிய திட்டங்கள் என்பது ஒரு நிதி பாதுகாப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நிலையான வருமானம் கிடைக்க வேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த வகையில், அரசு வழங்கும் தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme) மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) இரண்டும் பெரிதும் விவாதிக்கப்படும் முக்கிய தலைப்புகள். தற்போது தேசிய ஓய்வூதிய திட்டம் மூலம் ஒருவருக்கு ஓய்வு பெறும்போது ரூ.2.25 கோடி பணம் அல்லது மாதம் ரூ.84,000 வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுவதால், எது சிறந்தது என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. நேஷனல் பென்சன் ஸ்கீம் எதற்கெல்லாம் பயன்படுகிறது? யாரெல்லாம் இதில் பங்கு பெற முடியும்? என்பதையும், எந்த திட்டம் சிறந்தது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. இது வருங்கால நிதி திட்டமிடலுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
வருகிற 2025 ஜூன் மாதத்துக்குள் மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியா டுடே கட்டுரையின் அடிப்படையில் எந்த திட்டம் சிறந்தது என்று புரிந்து கொள்ள கீழே முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்.
தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் – முக்கியமான வேறுபாடுகள்
யூனிட்டட் பென்சன் ஸ்கீமில் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து 10 சதவிகிதத்தை செலுத்த வேண்டும். ஆனால் நேஷனல் பென்சன் ஸ்கீம் திட்டத்தில், 14 சதவிகிதத்த செலுத்த வேண்டும். இதனால், நேஷனல் பென்சன் ஸ்கீமில் அதிக தொகை சேமிக்க வாய்ப்பு உள்ளது. இரண்டு திட்டங்களிலும் அரசு 10 சதவிகிதம் பங்களிக்கிறது. ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் கூடுதலாக 8.5% அரசால் வழங்கப்படுகிறது, இது ஒரு சிறப்பு அம்சமாகும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வுக்கு பிறகு அடிப்படை சம்பளத்தின் 50 சதவிகிதம் நிலையான மாத ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும் ஒரே நேரத்தில் ரூ.8.45 லட்சம் தொகையும் வழங்கப்படும்.
மாறாக, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் சேமிக்கக்கூடிய தொகை 25 ஆண்டுகளில் ரூ.2.25 கோடி வரை வளரலாம். இதில் 60 சதவிகிதம் அளவுக்கு மாதம் ரூ.33,750 ஆக எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 40 ஐ Annuity-ஆக மாற்றி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் மாதம் ரூ.86,000 வரை பெற முடியும்.
ஒரு முறை ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், மீண்டும் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற முடியாது. அதே போல அரசு சேவையிலிருந்து ஓய்விற்கு முன்னரே விலகினால், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியத்தில் தாமதம் ஏற்படலாம்.