Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gold Price : 2035-ல் தங்கம் விலை என்னவாக இருக்கும்.. Rich Dad Poor Dad ஆசிரியர் கூறுவது இதுதான்!

Robert Kiyosaki gold prediction of 2035 | தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் தங்கத்தின் விலை எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மிகவும் பிரபலமான பொருளாதார வல்லுநர் ஒருவர் 20235-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்பதை கணித்துள்ளார்.

Gold Price : 2035-ல் தங்கம் விலை என்னவாக இருக்கும்.. Rich Dad Poor Dad ஆசிரியர் கூறுவது இதுதான்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 29 Apr 2025 17:03 PM

தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் தங்கம் விலை பல மடங்கு உயர்ந்த நிலையில், சாமானிய மக்களால் தங்கம்  வாங்க முடியாத நிலை உள்ளது. 2024 ஆம் ஆண்டு தங்கம் விலை 30 சதவீதம் வரை உயர்வை அடைந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு (2025) தொடக்கம் முதலே தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. உலக நாடுகள் டாலரில் முதலீடு செய்து வந்த காலம் மாறி தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கம் விலை மேலும் மேலும் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து உயரும் தங்க விலையால் சாமானியர்கள் கவலை

தங்கம் விலை இவ்வாறு தொடர் உயர்வை அடைந்து வரும் நிலையில், தங்கம் வாங்கவே முடியாத சூழல் ஏற்படுமோ என்று சாமானிய மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக தாங்கள் சேமித்து வைத்த பணம் மற்றும் பிற சேமிப்புகளை பயன்படுத்தி தங்கத்தை வாங்கி வருகின்றனர். தங்கம் விலை தற்போதே ரூ.70,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நிலையில், 20235 ஆம் ஆண்டு அதாவது சரியாத 10 ஆண்டுகள் கழித்து தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2035-ல் தங்கம் விலை என்னவாக இருக்கும் – நிபுணர்கள் கூறுவது என்ன?

தங்கம்  குறித்து பொருளாதார நிபுணர்கள் பல்வேறு விதமான கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், ரிச் டாட் பூர் டாட் (Rich Dad Poor Dad) புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகியின் (Robert Kiyosaki) கருத்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  2035 ஆம் ஆண்டு தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்த தனது கருத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதாவது, 2035 ஆம் ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கத்தின் விலை 30,000 டாலரை தாண்டும் என அவர் கூறியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சத்தை தங்கம் தாண்டும் என அவர் கணித்துள்ளார்.

வெள்ளி வாங்க வலியுறுத்தும் ராபர்ட் கியோசாகி

அதுமட்டுமன்றி, தங்கம் விலை ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில் வெள்ளி (Silver) மற்றும் பிட் காயின்களை (Bit Coin) பொதுமக்கள் வாங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோடையில் அதிகரிக்கும் டைஃபாய்டு - மலேரியா! அறிகுள் என்ன?
கோடையில் அதிகரிக்கும் டைஃபாய்டு - மலேரியா! அறிகுள் என்ன?...
காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பு சம்பவம்
காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை - பரபரப்பு சம்பவம்...
பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது அமைச்சரவை..!
பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது அமைச்சரவை..!...
3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா - அவரே பகிர்ந்த சீக்ரெட்!
3 மாதங்களில் 9 கிலோ குறைத்த ஜோதிகா - அவரே பகிர்ந்த சீக்ரெட்!...
ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி!
ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி!...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி! தேதியை குறிக்க சொன்ன பிரதமர் மோடி!...
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!
எளிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. அஜித் குமார்!...
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?
KKR அணிக்குள் மனஸ்தாபமா? பயிற்சியாளர் மீது வீரர்கள் அதிருப்தியா?...
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்
ஆட்டோ ஓட்டுநராக முகேஷ் அம்பானி - ஏஐ உருவாக்கிய வீடியோ வைரல்...
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்
அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்க வேண்டிய தமிழ் திகில் படங்கள்...
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!
வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!...