டெர்ம் இன்சூரன்ஸில் உள்ள சிக்கல்கள் – சிறந்ததை தேர்ந்தெடுப்பது எப்படி?

Term Insurance: டெர்ம் இன்சூரன்ஸை தேர்வு செய்யும் முன் அதில் உள்ள சிக்கல்களை தெரிந்துகொள்வது அவசியம். அப்படி தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் நமது குடும்பத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தும். சரியான டெர்ம் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்

டெர்ம் இன்சூரன்ஸில் உள்ள சிக்கல்கள் - சிறந்ததை தேர்ந்தெடுப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

14 Apr 2025 17:29 PM

இன்சூரன்ஸ் (Insurance) என்பது எதிர்பாராத சூழ்நிலைகளில் நமக்கு கைகொடுக்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance) என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நாம் செலுத்தும் தொகையானது நமது குடும்பத்தினருக்கு நிதி பாதுகாப்பு வழங்கும் இன்சூரன்ஸ் வகை. இந்த காலக்கட்டத்தில் இன்சூரன்ஸ்தாரர்களுக்கு ஏதாவது நடந்தால், அவரால் நியமிக்கப்பட்ட நபர் (Nominee) ஒரு பெரிய தொகையை பெறுவார். இது அவர் இல்லாதபோது அவரது குடும்பத்துக்கு பெரிய அளவில் பொருளாதார சிக்கல்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் ஒரு குறைவான தொகையை மாதம்தோறும் செலுத்தும்போது ரூ. 1 கோடி அளவுக்கு கவரேஜ் பெறலாம். இதற்கு வரி விலக்கும் உண்டு என்பது கூடுதல் சிறப்பு. தனது வருமானத்தை அதிகம் நம்பி இருக்கும் குடும்பத் தலைவருக்கு இந்தத் திட்டம் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

உங்கள் குடும்பம் எதிர்காலத்தில் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ப கவரேஜ் தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக உங்கள் ஆண்டு வருமானத்தின் 10-15 மடங்கு தொகையை எடுத்துக்கொள்வது நல்லது. ஒருவர் வேலை செய்து வருமானம் பெறும் காலம் முழுவதும் கவரேஜ் இருக்க வேண்டும். அதிகபட்சம் 60-70 வயது வரை தேர்வு செய்யலாம். அதிக பாதுகாப்பு பெற ‘Accidental Death Benefit’, ‘Critical Illness Rider’, ‘Disability Rider’ போன்றவை கூட சேர்த்துக்கொள்ளலாம்.  இது சிறிய கட்டணத்தில் அதிக பாதுகாப்பை தரும்.

டெர்ம் இன்சூரன்ஸை தேர்ந்தெடுப்பது எப்படி ?

உங்கள் மாத வருமானத்தில் எளிதில் அடங்கும் வகையில் பிரீமியம் இருக்க வேண்டுமே தவிர சுமையாக இருக்கக்கூடாது. இந்த நிறுவனத்தின் க்ளெயிம் செலவு விகிதம் அதிகமாக உள்ளதா என்பதை பாருங்கள். 95% மேல் இருப்பது நம்பகமானது. உங்கள் குடும்பத்தில் நம்பிக்கைக்குரிய நபரை Nominee-ஆக தெளிவாக குறிப்பிட வேண்டும். பின்பு தேவைப்படும்போது அதனை மாற்றிக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. சில திட்டங்கள் மருத்துவ பரிசோதனையுடன் மட்டுமே கிடைக்கும். இது ஒருவகையில் நன்மையும் கூட. ஏனெனில் Claim-ஐ நிராகரிக்க வாய்ப்பு குறைவு. உங்கள் உடல் நிலை, புகை மற்றும் மது பழக்கங்கள் ஆகிய தகவல்களை சரியாக தெரிவிக்க வேண்டும். தவறான தகவலால் நமது Claim நிராகரிக்கப்படலாம்.

டெர்ம் இன்சூரன்ஸை தேர்ந்தெடுத்த பிறகு, அதன் அனைத்து விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். சரியாக கவனிக்காமல் குறவான ப்ரீமியம் உள்ள திட்டங்களைப் பார்த்து தேர்வு செய்துவிட்டால் அது  எதிர்காலத்தில் நமது குடும்பத்துக்கு நஷ்டத்தை ஏர்படுத்தும். புதிதாக திருமணமானவர்கள், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுபவர்கள் இந்த திட்டம் பாதுகாப்பு அரணாக இருக்கும். டெர்ம் இன்சூரன்ஸ் நன்மை பயக்கும் சிறந்த திட்டமாகும். அதனை மேலே சொன்னபடி சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது பல வழிகளில் நமக்கு கைகொடுக்கும்.